TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
நெல்லிக்காய் நல்லதுனு யாரு சொன்னா? அதுல இவ்ளோ பக்க விளைவுகளும் இருக்கு...
நெல்லிக்காய் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மருந்துப் பொருள் என்றே கூறலாம். மக்களின் டயாபெட்டீஸ் நோயிலிருந்து கூந்தல் உதிர்தல் மற்றும் சீரண சக்தி வரை இதைத் தான் பயன்படுத்துகின்றனர்.
உலர்ந்த மற்றும் ப்ரஷ்ஷான நெல்லிக்காய்கள் ஆயுர்வேதத்தில் பெரிதும் பயன்படுகிறது. நெல்லிக்காய் மரத்தின் ஒட்டுமொத்த பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன.
பக்க விளைவுகள்
பழங்கள், விதைகள், இலைகள், வேர்கள், பட்டை போன்றவை மூலிகை தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. இந்த பயன்களுக்கிடையில் அதிகமான நெல்லிக்காயை பயன்படுத்துவது சில பக்க விளைவுகளையும் நமக்கு ஏற்படுத்தத் தான் செய்கிறது.
நெல்லிக்காய்
சில பேர்களுக்கு நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது கிடையாது. ஹூமோகுளோபின் குறைவான மக்கள், இரத்த உறைதலை தடுக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வீர்கள் நெல்லிக்காயை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
ஆனால் நெல்லிக்காயால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. ஆனால் சில மைல்டான பக்க விளைவுகள் உண்டாகின்றன. சரி வாங்க நெல்லிக்காயால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இரத்தம் கசிதல்
நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இவை இரத்தக் குழாய்களின் மீட்சித் தன்மையை அதிகரித்து, இரத்த ஒட்ட பாதையை அகலப்படுத்தி அழுத்தம் இல்லாமல் இரத்தம் செல்ல உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் இரத்தம் உறைவதை தடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்டு வரும் போது நெல்லிக்காயை அதிகளவு எடுப்பது தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தி விடும். இதனா் இரத்தம் கசியத் தொடங்கும் அபாயம் ஏற்படலாம்.
ஆராய்ச்சி தகவல்படி அதிகளவு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளும் போது 36% இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் ஹெப்பரைன், இபூப்ரோபின், அஸ்பிரின் போன்ற ஆன்டிகோகுலண்ட் மருந்துகளுடன் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
கல்லீரல் பாதிப்பு
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஹெப்போப்ரக்டிவ் செயல்கள் கல்லீரல் பிரச்சினையை சரி செய்கிறது. ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் என்னசம் ஆன குளூட்டிக் பைரூவிக் டிரான்ஸ்மினேஸ் அளவு அதிகரிக்கும் போது கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர். ஆனால் நெல்லிக்காயினால் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை. நீங்கள் நெல்லிக்காயுடன் இஞ்சி, சீந்தில் கொடி மற்றும் இந்திய பிரான்சின்சென்மை போன்ற மூலிகை யை சேர்த்து சாப்பிடும் போது கல்லீரல் செயல் பாதிப்படைகிறது.
அமிலத்தன்மை
நெல்லிக்காய் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்ட ஒரு பழம். இதில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. இதை நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது.
மலச்சிக்கல்
நெல்லிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் மலத்தை வெளியேற்ற துணை புரிந்தாலும் அதிக அளவு நெல்லிக்காய் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். எனவே நீங்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரத்த அழுத்தம்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினைகள் இருந்தால் நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதிகளவு உப்பை உணவில் சேர்ப்பது இரத்தத்தில் சோடியம் அளவு அதிகரித்து சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்தி விடும். உடம்பில் நீர்த்தேக்க் ஏற்பட்டு விடும். இந்த அதிகளவு நீர்த்தேக்கம் உங்கள் சிறுநீரக பாதையில் அழுத்தத்தை ஏற்படுத்த காரணமாகி விடும்.
ஜலதோஷத்தை அதிகமாக்கும்
நெல்லிக்காய் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை கொண்டது. எனவே இதை பொடியாகவோ அப்படியே எடுத்துக் கொள்ளும் போது ஜலதோஷத்தை இன்னும் அதிகப்படுத்தி விடும். எனவே நீங்கள் ஜலதோஷ சமயத்தில் நெல்லிக்காயை சாப்பிட நினைத்தால் திரிபிலா மருந்துடனோ அல்லது நெல்லிக்காய் பொடியுடன் தேன் குழைத்து சாப்பிடுங்கள். அப்படி சாப்பிட்டால் இது ஜலதோஷம் திற்கு மருந்தாக மாறி விடும்.
சிறுநீர் எரிச்சல்
அதிகளவில் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. நுரையுடன் கலந்த சிறுநீர், துர்நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல் ஏற்படுகிறது.
அழற்சி பாதிப்பு
அதிகளவில் நெல்லிக்காயை சாப்பிடும் போது வயிற்று வலி, வாந்தி, குமட்டல், சருமம் சி வத்தல், வாயை சுற்றி வீங்குதல், அரிப்பு, தலைவலி, தூக்கம், சரும வடுக்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க : குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? இத சாப்பிடுங்க சீக்கிரம் குழந்தை உண்டாகிடும்...
சரும ஈரப்பதம் இழத்தல்
இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கிறது. எனவே சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால் அதிகளவு தண்ணீர் குடியுங்கள். நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு தொண்டை வறண்டு போய் காணப்பட்டால் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.