Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இளநீர் வழுக்கை பிடிக்குமா உங்களுக்கு? ஆனா அதை சாப்பிடலாமா? கூடாதானு தெரியுமா?
தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம், சருமம், மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதய ஆரோக்கியம், நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல், வயதாகுவதை தடுத்தல், சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு
நிறைய மக்கள் தேங்காயை நட்ஸாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது ஒரு பழம் என்பது உங்களுக்கு தெரியுமா. பொதுவாக இந்தியாவில் இது அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள மக்கள் இதை ஒரு ஆரோக்கியமான உணவாக கருதுகின்றனர்.

தேங்காய் பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் செழித்து வளருகிறது. இதிலிருக்கும் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் நிறைய மக்கள் தேங்காயில் உள்ள கொழுப்பின் காரணமாக இதை உடலுக்கு கேடு என்று தவறாக நினைத்து வருகின்றனர்.

தேங்காயின் நன்மைகள்
தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம், சருமம், மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதய ஆரோக்கியம், நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல், வயதாகுவதை தடுத்தல், சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர், வயிற்றெரிச்சல், காயங்கள் ஆறுவதற்கு, அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் சரி செய்கிறது.

ஊட்டச்சத்துகள்
தேங்காயில் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இவைகள் நமக்கு ஒரு மருந்துப் பொருள் மாதிரி செயல்படுகிறது.
பினால்ஸ்
ப்ளோனாய்டுகள்
அல்கலைடுகள்
டேனின்ஸ்
சபோனின்ஸ்
போன்ற மருத்துவ குணங்கள் நோய்களை எதிர்த்து போரிடுகின்றன.
விட்டமின்கள்
பீட்டா கரோட்டீன்
தயமின் அல்லது விட்டமின் பி1
ரிபோப்ளவின் அல்லது விட்டமின் பி2
நியசின் அல்லது விட்டமின் பி3
விட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம்
புரோட்டீன்
கொழுப்பு
நார்ச்சத்து போன்றவைகளும் காணப்படுகின்றன.
தாதுக்கள்
கால்சியம்
மக்னீசியம்
சோடியம்
பாஸ்பரஸ்
இரும்புச் சத்து
காப்பர்
ஜிங்க்

இதய ஆரோக்கியம்
தேங்காயில் உள்ள கொழுப்பு ஹைப்பர்லிப்பிடிமியா மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான விஷயம் என்கின்றனர்.
காரணம் தேங்காயில் உள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை. அதாவது மற்ற சேச்சுரட்டேடு கொழுப்புகளை போல் இல்லாமல் இதிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு சங்கிலி தொடர் மீடியமானது. இந்த கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை. இதனால் எந்த விதமான இதய நோய்களின் அபாயமும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
அதுமட்டுமல்லாமல் தேங்காயில் உள்ள கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) யை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் HDL யை கூட்டுகிறது. எனவே இது இதயத்திற்கு பாதுகாப்பானதும் கூட. இதற்கு முக்கிய காரணம் தேங்காயில் உள்ள கோக்கொசைன் என்ற பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.

ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள்
தேங்காயில் உள்ள இயற்கையான மைக்ரோ பியல் பொருட்கள் நாம் எடுத்துக் கொள்ளும் சிப்ரோஃப்ளோக்சசின் மாத்திரை மாதிரி செயல்படுகிறது. இதற்கு காரணம் இதிலுள்ள அல்கலைடுகள், பினால்கள், ப்ளோனாய்டுகள், டேனின்ஸ் போன்றவை பாக்டீரியாவின் செல் சுவரை எதிர்த்து போராடி அவற்றை நம் உடலிலிருந்து தூறல் வீசுகின்றன.
மைக்ரோபியல் பயன்கள்

காயங்கள்
சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் சருமப் பிரச்னைகள், சரும அழற்சி ஆகியவற்றை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன்களை இளம் தேங்காய் செய்கிறது. சரும தொற்று, மூளைக் காய்ச்சல், நிமோனியா, பாக்டிரேமியா, செப்சிஸ் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

குடல் ஆரோக்கியம்
குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு, பசியின்மை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ஏர்ஜினோசா- சிறுநீரக தொற்று, எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள தொற்று, தோல் நோய்க்கு உதவுகிறது
ஆல்பிகன்ஸ் - பூஞ்சை தொற்றுக்கு உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சேதம் நமது உடலில் ஏகப்பட்ட நோய்களின் இருப்பிடமாக அமைந்து விடும். இதய நோய்கள், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருத்தல், புற்று நோய், ஆர்த்ரிட்டீஸ், வயதான தோற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். இதற்கு தேங்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் ப்ளோனாய்டுகள் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாதிரி செயல்படுகின்றன.
ப்ளோனாய்டுகள் உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் கிருமிகளை வெளியேற்றுகிறது. அஸ்கார்பிக் அமிலமும் ஒரு போர் வீரர்கள் மாதிரி செயல்பட்டு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் நோய் தாக்கும் அபாயத்திலிருந்து நம் உடல் பாதுகாப்பாக இருக்கும்.

அழற்சி எதிர்ப்பு பொருள்
உங்கள் உடலில் அழற்சி எதிர்ப்பு சக்தி குறையும் போது அழற்சி ஏற்படுத்தும் பொருட்கள் அதிகமாகி நிறைய நோய்களும் பாதிப்புகளும் தொற்றி கொள்ளும். தேங்காயில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்பு பொருள் அழற்சி ஏற்படுத்தும் பொருட்களை அடியோடு அகற்றுகிறது. இதனால் நம் உடலில் ஏற்படும் சிறு காயங்கள் கூட அழற்சியை ஏற்படுத்தாமல் சீக்கிரமே விரைந்து ஆறி விடுகின்றன. இதற்கு தேங்காயில் உள்ள என்சைமே காரணமாகும். தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் அழற்சியை தடுக்கிறது.

எரிந்த சருமம் மற்றும் காயங்கள் ஆற
தேங்காயில் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் காயங்களை ஆற்றும் ஏஜெண்ட்டாக செயல்படுகிறது. காயங்களை சுருங்கச் செய்து பாதிக்கப்பட்ட சருமம் விரைவில் ஆற தேங்காய் உதவுகிறது. நெருப்பு பட்ட சருமம், அழற்சி போன்றவற்றை போக்கவும் தேங்காய் சிறந்து விளங்குகிறது.

அல்சீமர் நோய்
தேங்காய் நமது அறிவாற்றலை வலிமையாக்கும் பொருள். இதிலுள்ள மீடியம் கொழுப்பு சங்கிலி கீட்டோனாக நமது உடலில் உடைக்கப்படுகிறது. இந்த கீட்டோன்கள் மனித மூளைக்கு தேவையான ஆற்றலாக செயல்படுகிறது. எனவே இது நினைவாற்றலை அதிகரித்து அல்சீமர் போன்ற மறதி நோயை தடுக்கிறது.
அம்லைடு பிளக் (Amyloid plaque) இது ஒரு விதமான புரோட்டீன் ஆகும். இந்த புரோட்டீன் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையே குவிந்து அந்த நரம்பு செல்களை சாகடித்து விடும். இதனால் நினைவின்மை ஏற்பட்டு மறதி ஏற்பட ஆரம்பித்து விடும்.
ஆனால் தேங்காயில் உள்ள ஆக்ஸினேற்றிகள் இந்த அம்லைடு புரதத்திற்கு எதிராக செயல்பட்டு மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது. இதே போன்று இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் மூளையின் நரம்பு செல்கள் அழிவதை தடுக்கிறது.

நீரிழிவு நோய்க்கு எதிரான சக்தி
நீங்கள் தேங்காயை உணவில் சேர்த்து கொண்டு வந்தால் உங்கள் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதை காணலாம். இதற்கு காரணம் இதிலுள்ள அர்ஜினைன் என்ற புரதமாகும். இந்த அர்ஜினைன் கணையத்தில் உள்ள பீட்டா செல் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பீட்டா செல்கள் தான் இன்சுலின் சுரப்பிற்கு காரணமாக அமைகிறது. எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது பெரிதும் உதவுகிறது.
மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உணவிலிருந்து சர்க்கரை இரத்தத்தில் கலப்பது மெதுவாக நடக்கிறது. எனவே உடனடியாக சர்க்கரை அளவு கூடுதல் தடுக்கப்படுகிறது.
உயர் சர்க்கரை அளவு வெகுகாலம் நீடித்தால் அவை கணையத்தை பாதித்து விடும். ஆனால் தேங்காயில் உள்ள இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கணையத்தை இந்த பாதிப்பிலிருந்து காக்கிறது.

அல்சர்
உங்களுக்கு அல்சர் இருந்தால் குறைந்த செலவில் அதை குணப்படுத்த தேங்காய் சிறந்த வழியாகும். இது ஆன்டி அல்சர் ஏஜெண்ட்டாக செயல்படுகிறது. நீங்கள் உணவில் சேர்த்து கொண்டு வந்தாலே போதும் விரைவில் உங்கள் அல்சர் குணமாகி விடும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அல்சரை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக போரிடுகின்றன. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வயிற்று சுவர்களை பாதிப்பிலிருந்து காக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் கோயிலில் தேங்காய் உடைத்து உணவாக உட்கொள்வதை சம்பிரதாயமாக கொண்டு வந்துள்ளனர். இனியாவது தேங்காயின் நன்மையை உணருவோம்.



Click it and Unblock the Notifications