Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
முட்டைகோஸ் பற்றி இதுவரை நமக்கு தெரியாத 4 ரகசியங்கள்... இப்ப தெரிஞ்சிக்கோங்க...
இங்கே முட்டைகோஸில் உள்ள அற்புதமான நன்மைகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு, உங்களுடைய தினசரி உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.
முட்டைகோசு ஒரு குர்ஷிஃபெரஸ் வகையைச் சார்ந்தது. இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

இதில் விட்டமின் ஏ, பி 1, பி2, பி6, ஈ, சி, கே மற்றும் கால்சியம், இரும்புச் சத்து, அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ் போலேட் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன. எனவே இதை காய்கறிகளின் சூப்பர் ஹூரோ என்றே சொல்லலாம்.

முட்டைகோஸ்
இந்த முட்டைகோசை வேக வைத்தோ, சமைத்தோ, வதக்கி, ஜூஸாக, பச்சையாக என்று எந்த வடிவத்தில் வேண்டும் என்றாலும் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து கொள்ளலாம். இதன் மருத்துவ குணங்களை பார்க்கும் போது இது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்றே கருதலாம். அந்தளவுக்கு இது ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

பயன்கள்
முட்டைகோஸ் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருப்போம். அதில் என்னென்ன மிக அற்புதமான நான்கு நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
1. உடல் எடை குறைதல்
2. உடல் நச்சுக்களை வெளியேற்றுதல்
3. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல்
4. ஆரோக்கிய சருமம்
ஆகியவை ஆகும்.

உடல் எடை குறைதல்
இந்த முட்டைகோசில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்து மற்றும் விட்டமின்களும் அடங்கியுள்ளன. குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த முட்டைகோசை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையும் கூடாது.
உண்ணும் உணவை புளிக்க வைக்க பயன்படும் புரோபயோடிக் பாக்டீரியாக்கள் இதில் உள்ளன. இந்த புரோபயோடிக் பாக்டீரியாக்கள் நமது குடலுக்கு சிறந்த நண்பனாக செயல்பட்டு உணவு சீரணிக்க உதவுவதோடு உடல் மெட்டா பாலிசத்தையும் சீராக்குகிறது.

நச்சுக்களை வெளியேற்றுதல்
முட்டைகோசில் விட்டமின் சி மற்றும் சல்பர் உள்ளது. இந்த இரண்டு பொருட்கள் தான் நமது உடலில் உள்ள யூரிக் அமில நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் முட்டைகோசு ஜூஸில் இண்டோல் -3 கார்பனைல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் தான் நமது கல்லீரலை சுத்தப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த கல்லீரல் தான் நமது உடலின் புரோட்டீன், ஹார்மோன் உற்பத்தி, கிளைக்கோஜென் சேமிப்பு போன்ற செயலாக்கத்திற்கு உதவுகிறது. SCI என்ற சர்வதேச மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் கோமல் கூறுகையில், முட்டைகோசு ஜூஸ் இலகுவான மலம் வெளியேற்றத்திற்கும் அதே நேரத்தில் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்கிறார்.

இரத்த சர்க்கரை அளவு
சிவப்பு முட்டைகோசில் பைட்டோ நியூட்ரிஷனான பீட்டாலைன் உள்ளது. இது தான் அந்த காய்கறிக்கு நிறத்தை கொடுக்கிறது. இந்த பீட்டாலைன் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து இன்சுலின் உற்பத்தியை நிலைப்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி ஹைகிளைசெமிக் பொருள் டயாபெட்டீஸ் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, முட்டைகோசு, ப்ரக்கோலி மற்றும் கீரைகள் போன்றவை டைப் 2 டயாபெட்டீஸ் வருவதை தடுக்கிறது. எனவே பச்சை இலை காய்கறிகளை உண்டு வந்தால் 14% டயாபெட்டீஸ் நோய் வராமல் தடுக்க இயலும்.

ஆரோக்கியமான சருமம்
ஊதா மற்றும் பச்சை நிற முட்டைகோசில் சிலிக்கான், சல்பர் போன்ற அழகை கொடுக்கும் தாதுக்கள் உள்ளன. சல்பர் நமது உடற் செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, கழிவுப் பொருட்களை செல்களில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த செயலை சவ்வூடு பரவல் மூலம் மேற்கொள்கிறது. எனவே உங்களுக்கு தூய்மையான ஆரோக்கியமான சருமம் வேண்டும் என்றால் முட்டைகோசை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
டி.கே. என்ற நிறுவனம் வெளியிட்ட , "ஹீலிங் ஃபுட்ஸ்" என்ற நூல் கூறுவதாவது முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் சி, கே மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதை தடுத்து இளமையுடன் இருக்க உதவுகிறது. இதிலுள்ள சல்பர் பருக்கள் மற்றும் சரும நோயான எக்ஸிமா போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

ஊட்டச்சத்து அளவுகள்
அமெரிக்க வேளாண்மை துறை கருத்துப்படி 100 கிராம் முட்டைகோசில் 0.10 கிராம் கொழுப்பு, 18 மில்லி கிராம் சோடியம், 170 மில்லிகிராம் பொட்டாசியம், 5.80 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 1.28 கிராம் புரோட்டீன் உள்ளது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட முட்டைகோசை இனியாவது உங்கள் உணவில் பங்களிக்க இடம் கொடுங்கள். அப்பொழுது தான் ஆரோக்கியமும் உங்களுடன் வசிக்கும்.



Click it and Unblock the Notifications