தினமும் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு சர்க்கரை வியாதி வராது...

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky
தினமும் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு சர்க்கரை வியாதி வராது... | Boldsky

நமது உடலுக்கு தேவையான குரோமியம் தாது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஆனால் நம் உடலின் செயல்பாடுகளுக்கு குரோமியமும் மிகவும் முக்கியமான தாது ஆகும். குரோமியம் தான் நமது உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் தான் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது. இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாத காரணத்தினால் தான் நமக்கு டயாபெட்டீஸ் வரும் அபாயமும் ஏற்படுகிறது.

சில ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த குரோமியம் தான் நமது மரபணுவான டிஎன்ஏ, குரோமோசோம் போன்றவற்றின் பாதிப்பை தடுக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் கூட இந்த குரோமியம் பயன்படுகிறது.

தேச சுகாதார நிறுவனம் கருத்துப்படி பார்த்தால் இரண்டு வகையான குரோமியம் தாதுக்கள் உள்ளன. குரோமியம் 3+ மற்றொன்று குரோமியம் 6+ ஆகும். இதில் குரோமியம் 3+ உடலுக்கு தேவையானது,நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. குரோமியம் 6+என்பது நச்சு வாய்ந்தது இவை தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.

குரோமியத்தை எங்கு புாய் தேடுவது என்று குழம்பாதீர்கள். இயற்கையாகவே நாம் உண்ணும் உணவிலேயே குரோமியம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 19-50 வயதுடைய ஆணுக்கு 35 மைக்ரோகிராம் வரையிலும் மற்றும் பெண்களுக்கு 25 மைக்ரோகிராம் வரையிலும் குரோமியம் தேவைப்படுகிறது. இந்த தாதுவின் பற்றாக்குறையால் சோர்வு, வலுவற்ற எலும்புகள், ஆரோக்கியமற்ற சருமம், கண் பார்வை குறைபாடுகள், நினைவாற்றல் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

எனவே குரோமியம் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட குரோமியம் அடங்கிய உணவுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரக்கோலி

ப்ரக்கோலி

பிரக்கோலி ஒரு ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் அதிக அளவில் குரோமியம் அடங்கிய உணவும் கூட. இந்த காயில் விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் சி, விட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் போன்றவைகள் உள்ளன. நீங்கள் வேக வைத்த ப்ரக்கோலியையோ அல்லது வதக்கிய பிரக்கோலி உணவையோ அல்லது சாலட்டாகவோ எடுத்து கொள்ளலாம்.

மக்காச்சோளம்

மக்காச்சோளம்

குரோமியம் அடங்கிய மற்றொரு உணவு மக்காச்சோளம். இதில் இரும்புச் சத்து, விட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் ஆகிய பிற ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. மக்காச்சோளம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டயாபட்டீஸ் வருவதைத் தடுக்கலாம். மேலும் இதய நோய்கள், இரத்த அழுத்தம் மற்றும் குடல் புற்றுநோயிலிருந்தும் நம்மை காக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குரோமியம், விட்டமின் ஏ, விட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் பிற விட்டமின்கள், தாதுக்கள் போன்றவைகள் அடங்கியுள்ளன. உருளைக் கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகவும் உடலுக்கு நல்லது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் குரோமியம், ஜிங்க், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த மாட்டிறைச்சியில் ஓமேகா 3, ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், லினோலிக் அமிலம் போன்றவைகளும் அடங்கியுள்ளன. எனவே இது சுவைமிகுந்த உணவு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமான உணவும் கூட.

ஓட்ஸ்

ஓட்ஸ்

காலை உணவிற்கு சிறந்த உணவு என்றால் அது ஓட்ஸ் தான். இதில் குரோமியம், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் போன்றவைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன

பச்சை பீன்ஸ்

பச்சை பீன்ஸ்

பச்சை பீன்ஸிலும் ஏராளமான குரோமியம் அடங்கியுள்ளது. ஒரு கப் பச்சை பீன்ஸில் 2.04 மைக்ரோகிராம் குரோமியம் உள்ளது. இதில் மற்ற ஊட்டச்சத்துக்களான விட்டமின் கே, விட்டமின் சி, விட்டமின் பி2, போலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.

முட்டை

முட்டை

உங்களுக்கு தெரியுமா முட்டையிலும் அதிகமான குரோமியம் காணப்படுகிறது. ஒரு முட்டையில் 26 மைக்ரோகிராம் அளவிற்கு குரோமியம் காணப்படுகிறது. மேலும் இதில் புரோட்டீன், கால்சியம், விட்டமின் டி, விட்டமின் பி12, மக்னீசியம், விட்டமின் பி6 போன்றவைகள் உள்ளன.

திராட்சை

திராட்சை

திராட்சையில் குரோமியம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி6 மற்றும் இதர தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. எனவே தினமும் ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸ் குடிப்பது நல்லது. குரோமியம் சத்தும் கிடைக்கும். ஒரு கப் திராட்சை ஜூஸில் 8 மைக்ரோ கிராம் குரோமியம் உள்ளது.

தக்காளி

தக்காளி

தக்காளியில் அதிகப்படியான குரோமியம் அடங்கியுள்ளது. ஒரு கப் தக்காளியில் 1.26 மைக்ரோகிராம் குரோமியம் அடங்கியுள்ளது. மேலு‌ம் இதில் விட்டமின் சி, பயோடின், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவைகள் அடங்கியுள்ளன. நீங்கள் சாலட் மற்றும் சூப்புடன் தக்காளி சேர்த்து சாப்பிடலாம். தினமும் இரவு உணவுாடு கொஞ்சம் தக்காளி சூப் சேர்த்துக் கொள்ளலாம். அது நல்ல நிம்மதியான உறக்கத்தையும் தரும்.

ப்ரூவர்ஸ் ஈஸ்ட்

ப்ரூவர்ஸ் ஈஸ்ட்

இதில் குரோமியம் அதிக அளவில் அடங்கியுள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் ப்ரூவர்ஸ் ஈஸ்ட்டில் 15 மைக்ரோகிராம் குரோமியம் உள்ளது. ப்ரூவர்ஸ் ஈஸ்ட் என்பது ஊட்டச்சத்து மாத்திரைகள் இவை உங்கள் உடலுக்கு தேவையான குரோமியத்தைக் கொடுத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 foods rich in chromium you should know

Chromium is a trace mineral which many individuals are unaware of. It is a type of trace mineral required by the body in small amounts for proper system functioning. Chromium plays a major role in insulin productivity that allows the body to balance the blood sugar levels. Research shows that this mineral can help to protect DNA chromosomes from damage and also helps in improving cardiovascular health. Chromium is also known to improve weight management and brain health.