அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியவுடன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உணவுகள் சைவம் அசைவம் என இரண்டு வகை இருக்கிறது. உடல் ஆரோக்கியம், டயட் என்ற பேச்சு ஆரம்பித்தவுடனேயே அசைவ உணவுகளை நிறுத்த வேண்டும் என்ற பேச்சு தான் மேலோங்குகிறது.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து விதமான சத்துக்களும் தேவை அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென அதனை நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய் :

இதய நோய் :

சைவம், அசைவம் சாப்பிடுவோர் மத்தியில், அன்றாட வாழ்க்கைமுறையை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடும் நபர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அசைவ உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கிறது அதனை தவிர்க்கும் போது உடலில் கொழுப்பு படிவது குறையும் இதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது.

ருசியில் மாற்றம் :

ருசியில் மாற்றம் :

நீங்கள் திடீரென இறைச்சி உணவுகளை கைவிட்டு முற்றிலுமாக சைவ உணவுகளுக்கு மாறும் போது, ருசியில் பெரும் மாற்றத்தை உணர்வீர்கள். ஏதோ பத்திய சாப்பாட்டை சாப்பிடுவது போல இருக்கும். இதன் காரணமாக தான், இறைச்சியை ஓரிரு நாட்களுக்கு மேல் சாப்பிடுவதை நிறுத்த முடியாமல், மீண்டும் இறைச்சி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள் அசைவ பிரியர்கள்.

தசை வலிமை :

தசை வலிமை :

தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இறைச்சி மற்றும் முட்டைகளில் புரதச்சத்து மிகுதியாக இருக்கின்றது. எனவே, நீங்கள் இறைச்சி உணவுகளை கைவிடும் போது, அதற்கேற்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், தசைகளின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.

உடல் சூடு குறையும் :

உடல் சூடு குறையும் :

பெரும்பாலும் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் இறைச்சி உணவை கைவிடும் போது, உடல் சூடு குறையும். உடல்நிலையில் இலகுவான நல்ல மாற்றம் காண இயலும்.

செரிமானம் சீராகும் :

செரிமானம் சீராகும் :

இறைச்சி உணவுகள் கடின உணவு வகையை சார்ந்தவை. எனவே, செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆதலால், நீங்கள் இறைச்சி உணவை தவிர்க்கும் போது, செரிமானம் சீராகும்.

சத்தான உணவு :

சத்தான உணவு :

புரதம், இரும்பு, போன்ற உடல் வலிமைக்கு தேவையான சத்துகள் இறைச்சியில் மிகுதியாக கிடைக்கும். எனவே, நீங்கள் இறைச்சியை கைவிடும் போது, ரசம், சாம்பார் மட்டுமில்லாமல், அதற்கேற்ற சத்தான சைவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம்.

செல் வளர்ச்சி :

செல் வளர்ச்சி :

அசைவ உணவினை சமைக்கும் போது அதிகமாக வேக வைப்பது, எண்ணெயில் பொரித்தெடுப்பது போன்ற ஏதேனும் ஒரு வகையில் ஓவர் குக்டு செய்யப்பட வேண்டும். இதிலிருந்து வெளிப்படும் சில கெமிக்கல்களால் நம் உடலிலுள்ள டிஎன்ஏவை குழைத்திடும். சட்டென அதில் மாற்றம் வரும் போது, இதனால் செல் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What happens when you stop eating Non veg

What happens when you stop eating Non veg
Story first published: Tuesday, October 10, 2017, 17:00 [IST]