For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்திற்கும் ஆரோக்கியமற்ற வாழிவிற்கும் இருக்கும் சம்பந்தம் என்ன?

ஆரோக்கியமற்ற உணவு முறை மன அழுத்தத்திற்கு காரணம் என இந்த கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஏற்படும் அதிகமான மன அழுத்தம் வேலை புரிபவர்களின் உண்ணும் நடத்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவது, அதிகமான அளவு உண்ணுவது போன்றவைகள் இந்த அழுத்தத்தால் ஏற்படுகின்றன. அலுவலகத்தில் மட்டும் இல்லாமல் இந்த நிலை அவர்களின் இரவு உணவை வீட்டில் உண்ணும்போதும் தொடர்கிறது.

இதனை உறுதி செய்ய ஆராச்சியாளர்கள் 2 விதமான ஆய்வை மேற்கொண்டனர். மொத்தம் 235 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர். முதல் ஆய்வில், சீனாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பெனியிலிருந்து 125 பேர் கொண்ட குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. காலையில் மிக அதிக அளவு வேலை பளு இவர்களுக்கு வழங்கப்பட்டது.

Unhealthy food choice may lead to stress

இரண்டாவது ஆய்வில் , 110 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் வாடிக்கையாளர் சேவை மைய தொழிலாளர்கள் . அதிகாரத்துடன் கடுமையாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டது. இது இவர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது.

நாள் முழுதும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இரண்டு குழுவில் உள்ளவர்களும், எதிர்மறை மன நிலையில் இரவு உணவில் ஜங்க் உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டனர். உணவின் அளவும் சராசரியை விட அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சில நேரங்களில் உணவு உண்ணும் செயல் எதிர்மறை மன நிலையை கட்டுப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெறுப்பை தொலைத்து அவர்கள் விரும்பும் மனநிலையை அடைவதற்காக சிலர் அதிகம் உண்ணுகின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது , மன அழுத்தத்தின் போது சுய கட்டுப்பாட்டின் அளவு குறைவதன் விளைவாகும். மன அழுத்தத்தால் பாதுக்கப்பட்ட ஒரு நபர், தனது அறிவாற்றல் மற்றும் நடத்தையை கட்டுப்படுத்துவதில் தவறி விடுகிறார். இதனால் சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்வியை தழுவுகிறார்.

இந்த தீய விளைவுவுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவதற்கான தீர்வுகள் இருக்கிறது. இரவு நேரத்தில் ஆழமாக தூங்கும் தொழிலாளர்கள் மறுநாள் வேலையில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மன அழுத்தத்தை வெற்றிகரமாக கடக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவில் இருந்தும் தொழிலாளர்கள் அவர்களை காத்துக் கொள்கின்றனர்.

English summary

Unhealthy food choice may lead to stress

Unhealthy food choice may lead to stress
Story first published: Wednesday, September 27, 2017, 17:15 [IST]
Desktop Bottom Promotion