செரிமானக்கோளாறு உடனடியாக தீர இந்த காய சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

வாழைத்தண்டு பல லேயர்களாக இருக்கும். அதிக ஃபைபர்கள் நிரம்பிய அதனை நாம் உணவாக பயன்படுத்துவதுண்டு. எளிதாக கிடைத்திடும் வாழைத்தண்டில் ஏரளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.

Unbelievable Health Benefits Of Banana Stem

விலைக்குறைவான இந்த தண்டு பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எல்லாம் என்னென்ன என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நச்சுக்கள் :

நச்சுக்கள் :

வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். எலுமிச்சை, ஏலக்காய் கலந்து வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர டாக்ஸின்கள் அதிகமாக வெளியேறி உடல் புத்துணர்வு பெறும்.

கிட்னி ஸ்டோன் :

கிட்னி ஸ்டோன் :

வாழைத்தண்டு சாறு குடித்து வர அது கிட்னி கற்களை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாறில் ஏலக்காயை தட்டிப்போடுங்கள்.

இதனால் கிட்னி கற்களினால் ஏற்படும் வலி குறைந்திடும்.வாழைத்தண்டு சாற்றில் லெமன் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் கற்கள் உருவாகமல் தடுக்க முடியும்.

வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும்.

எடை குறை :

எடை குறை :

சீக்கிரமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானதும் கூட. சமைத்தோ அல்லது சாறாகவோ வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால். நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் தேவையற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது குறைந்திடும்.

தொப்பை :

தொப்பை :

வாழைத்தண்டில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை கரைத்திடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாற்றுடன் இஞ்சி சேர்த்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதில் கலோரியும் குறைவு என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

அசிடிட்டி :

அசிடிட்டி :

எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாதவர்கள், அடிக்கடி ஜீரணக்கோளாறினால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாப்பிட்டு வர விரைவில் பலன் உண்டு.

இதைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உணவு ஜீரணமாவதற்கான ஆசிட்டும் அதிகரிப்பதால் உணவு சீக்கிரமாக செரிக்கப்படும். இதனால் ஜீரணக்கோளாறுகள் தவிர்க்கப்படும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இதில் இருக்கும் துவர்ப்புச் சுவையினால் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்தாக அமைந்திடும்.

கிட்னி நன்றாக செயல்பட வேண்டுமானால் நீங்கள் உங்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ரத்த சோகை :

ரத்த சோகை :

வாழைத்தண்டில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி6 இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

இதனால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unbelievable Health Benefits Of Banana Stem

Unbelievable Health Benefits Of Banana Stem
Story first published: Tuesday, September 5, 2017, 14:43 [IST]
Subscribe Newsletter