இறைச்சி வாங்குவதற்கு முன்னால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் வலுப்பெற பலரும் இறைச்சியை சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதிலும் ஃப்ரை செய்த உணவுகள் கிரேவி போன்றவை அதிகம் விரும்பப்படுகிறது. இறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் . எப்பிடி சமைக்க வேண்டும்? எப்பிடி சாப்பிட வேண்டும் போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானப்பிரச்சனை :

செரிமானப்பிரச்சனை :

உணவு கெட்டியானதாக உள்ளே செல்லும் போது அது செரிமானம் ஆவதற்கு தண்ணீர் தேவைப்படும். உடலிலிருந்து தண்ணீரை எடுத்தபிறகு தாகத்தை உருவாக்கி அதிக தண்ணீரை குடிக்கச் செய்யும் இது செரிமாண மண்டலத்திற்கு கூடுதல் வேலை. இதனால் செரிமான மண்டலம் தொய்வுற்று பல தொந்தரவுகள் ஏற்படும்.

இதனால், இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குழம்பு வடிவத்தில் எடுப்பது தான் நல்லது. அப்படி சாப்பிட்டால் அவற்றின் ஆற்றலை உடனடியாக நம் உடலில் சேரும்.

நாட்டுக்கோழி சமையல் :

நாட்டுக்கோழி சமையல் :

கோழியை தோலுடன் சமைப்பதே சிறந்தது. நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும். இது சமைக்கும்போது தனியாகத் திரளாமல் குழம்புடன் கலந்துவிடும். செரிமானத்திலும் தொல்லை தராது. செரிமானத்தில் தொல்லை தராத கொழுப்பு, உடலுக்கு நேரடியாக ஊக்கம் தருவதாகவே இருக்கும்.

சமையல் பாத்திரம் :

சமையல் பாத்திரம் :

இறைச்சி என்றாலே நன்றாக கழுவி குக்கரில் ஐந்தாறு விசில் வருகிற வரை நன்றாக வேக வைத்துவிட்டு மற்ற விஷயத்தை செய்வோம். இது தவறானது. அதிக அழுத்தத்தில் வேகும் உணவுப் பொருள் தனது சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை உண்ணும் நமக்கும் செரிமானம் நடக்க தாமதமாகும்.

இறைச்சியை சமைக்க மண் பாத்திரத்தை தேர்வு செய்வது நல்லது. கூடுதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று மண் பாண்டத்தையே தேர்ந்தெடுங்கள். மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது.

Image Courtesy

கறியை எப்படி வாங்க வேண்டும்? :

கறியை எப்படி வாங்க வேண்டும்? :

எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது அதில் முக்கியமானது, இறந்த உடன் ரத்ததில் உள்ள செல்கள் உடனடியாக அழுகத் தொடங்கிடும்.

நீங்கள் வாங்கும் கறி ஃப்ரஷ்ஷானது தானா என்பதையும் அதிலிருக்கும் ரத்தத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆடு வெட்டப்படும் போது அதிலிருந்து ரத்தம் முழுவதும் வடிந்துவிடும். இறைச்சியில் ரத்தம் நிற்காது

ஆட்டுக்கறி :

ஆட்டுக்கறி :

கறி வாங்கச் செல்லும் போது அதிகமாக இருக்கும் என்பதால் தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள் . அதிக அசைவுகள் உள்ள தசைகள் கடினமானதாக இருக்கும்.

நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும் என்பதால் அவற்றை வாங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things to remember when you Eat Non veg

Things to remember when you Eat Non veg
Story first published: Thursday, August 31, 2017, 11:11 [IST]
Subscribe Newsletter