For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்டு கீரையை வாரம் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்!. ஏன்?

தண்டுக் கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும் எப்படி சாப்பிட வேண்டும் என்றும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

வீட்டில் கீரையை சமைத்தாலே கீரை தானா என்று சலிப்போடுபதில் வரும். கீரை குழ்க்னதை பருவத்திலிருந்தே சமைத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகிவிடும். இடையில் அபூர்வமாக கொடுத்தால் இப்படித்தான்.

கீரையை மலிவான பதார்த்தம் என்று எண்ணி, தள்ளி விடுவது பழக்கமாகி விட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் இப்போதுதான் கீரைகளின் அருமை பெருமைகளை அறிந்து வருகிறோம். கீரை வகைகளிலே மிக பெரியதும் உயரமானதுமான, தண்டுக்கீரையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்டுக் கீரை :

தண்டுக் கீரை :

தண்டுக்கீரையை மிகச் சரியான பருவத்தில் பறித்தால், அதன் கீரையும் தண்டும் மிகச் சிறந்த காய்கறியாகும். இக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடலாம்.

பித்தம் தணியும் :

பித்தம் தணியும் :

பித்தம், மிகுதி உள்ளவர்கள் தண்டுக்கீரையை நன்கு பயன்படுத்தலாம். தண்டைச் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் நன்கு போவதால், உடல் எடை குறைந்தது தேவையில்லாத நீர் கோர்த்தல் தடுக்கப்படும். இதில் நார்ச்சத்து இருப்பதால், ரத்தம் சுத்தி அடையும். மலச்சிக்கல் இல்லாமல் செய்து விடும்.

கால்சியம் பலம் :

கால்சியம் பலம் :

இக்கீரையை தினமும் உண்டு வரலாம். இதனால், இளமையில் முதுமை தவிர்க்கப்படுகிறது. முதுமையில் ஏற்படும் கால்சியம். இரும்பு விகித வேறுபாட்டை சரி செய்யக்கூடியது.

கர்ப்பிணிப்பெண்கள் :

கர்ப்பிணிப்பெண்கள் :

கருவுற்ற பெண்கள், தினமும் அரை கப் தண்டுக்கீரைச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு

எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும். இதில் கால்சியம், 400 மி.கி., உள்ளது. இவ்வளவு அதிகமான கால்

சியம் சத்து முருங்கைக்கீரை, வெந்தயக்கீரையில் மட்டுமே உள்ளது.

குடல் புண் :

குடல் புண் :

குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons here why should we consume green leafy vegetables thrice a week

Reasons here why should we consume green leafy vegetables thrice a week
Story first published: Saturday, April 15, 2017, 13:28 [IST]
Desktop Bottom Promotion