Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
நீங்கள் ஊறுகாய் பிரியரா? அப்ப கண்டிப்பா இத படிங்க
ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன
இந்தியர்களுக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரது வழக்கமாக உள்ளது. மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பல வீடுகளில் நடக்கும் ஒரு விஷயம். நாம் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தும் இந்த ஊறுகாயினால் எத்தனை பலன்கள் இருக்கின்றன என்பதை இப்பகுதியில் காண்போம்.

தீய பாக்டீரியாக்களை அழிக்கிறது
ஊறுகாயில் அதிக அளவு ஆண்டிஆக்டிடன்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் நமது உணவில் உள்ள கெமிக்கல்களால் உண்டாகும் தீமைகளை குறைக்க இது உதவுகிறது.

செரிமான பிரச்சனை
ப்ரோபியோடிக் பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. நமது உடலில் செரிமானத்திற்கு எதிராக உள்ள பாக்டீரியாக்களை கொல்ல இவை உதவியாக இருக்கிறது. வினிகர் பயன்படுத்தாமல் இயற்கையாகவே உப்பு சேர்த்து புளிக்க வைக்கப்பட்ட ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது.

விட்டமின்கள், இரும்பு, கால்சியம், பொட்டாசியம்
புதிய ஊறுகாய் அல்லது சட்னிகளில் இலை காய்கறிகளின் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக கொத்தமல்லி, கறிவேப்பில்லை, கீரை, போன்றவை அடங்கியுள்ளன. இதனால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிட முடிகிறது.
வேறு சில விதமாக கொத்தமல்லி, கறிவேப்பில்லை ஆகியவற்றை கொடுத்தால் அதை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். இதனை சாப்பிடுவதால் வைட்டமின் சி, ஏ, கே, மற்றும் இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் கிடைக்கின்றன.

நீரிழிவு
வினிகர் கொண்ட ஊறுகாய்களை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது சக்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் நீங்கள் அதிக அளவு உப்பு உள்ள ஊறுகாய்களை தவிர்க்கவும். ஏனெனில் ஊறுகாய்களில் உள்ள அதிக உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கிறது
இந்தியாவில் கிடைக்கும் சிறிய மற்றும் பெரிய நெல்லிக்காய் ஊறுகாய்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கின்றன. இந்த ஊறுகாய்கள் ஆயுர்வேத அடிப்படையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய இந்திய குடும்பங்கள் நெல்லிக்காய் ஊறுகாயை ஜீரமாவதற்காக சாப்பிட்டு வருகின்றனர்.

கல்லீரலை காக்கிறது
நெல்லிக்காய் ஊறுகாய் ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் இதில் உள்ள ஹெப்டோப்ரோடெக்ட்டிவ் கல்லீரலை பாதுக்காகவும் உதவியாக உள்ளது. ஒரு ஆய்வில் கல்லீரல் பாதிக்கப்பட்ட மிருங்கங்களுக்கு நெல்லிக்காய் கொடுத்ததன் மூலம் அவற்றின் கல்லீரல் நல்ல நிலைக்கு மாறியது கண்டறியப்பட்டுள்ளது.

ஊறுகாய் சாப்பிடும் முன்னர் கவனிக்க வேண்டியவை
ஊறுகாய் என்றாலே அதில் உப்பு தன்மை அதிகமாக இருக்கும். இவை சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் இந்த உப்பு தேவையற்ற பாக்டிரீயாக்கள் மற்றும் பூஞ்சைகளிடம் இருந்து ஊறுகாயை காப்பாற்றுகிறது.
இருப்பினும் அதிக அளவு உப்பை உணவில் சேர்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் அதிக அளவு எண்ணெய் சேர்க்கபடுவதால் இது கொழுப்பை அதிகரிக்கிறது. எனவே ஊறுகாயை மிக குறைந்த அளவு எடுத்துக்கொள்வது அல்லது எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.



Click it and Unblock the Notifications











