லஸ்ஸி குடிச்சா இவ்ளோ நன்மைகளா? ஆச்சரியப்படுத்தும் பலன்கள்

Posted By:
Subscribe to Boldsky

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பால், தயிர்,மோர் போன்றவற்றினால் மட்டுமல்ல தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதாலும் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். உடனடியாக புத்துணர்சி அளிப்பதால் பலரும் லஸ்ஸியை விரும்பி குடிக்கிறார்கள்.

இதைத் தவிர லஸ்ஸி பல மருத்துவ பயன்களையும் தருகிறது. தயிருடன் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். சிலர் இதில் தேன், ஏலக்காய் உட்பட பல பொருட்களை மிக்ஸ் செய்தும் குடிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்டைய காலங்களில் லஸ்ஸி :

பண்டைய காலங்களில் லஸ்ஸி :

லஸ்ஸி என்பது ஏதோ இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பானமாக கருதுகிறோம். ஆனால் இது மஹாபாரதக்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

கண்ணன், பீமனுக்கு இந்த பானத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு `பீம சேன சீகாரணி' என்று பெயர்.

சத்ரபதி சிவாஜி காலத்தில் வாழ்ந்த ஆயுர்வேத அறிஞர் ரகு நாத சூரி, தான் எழுதிய 'போஜன குதூகலம்' என்ற ஆயுர்வேத நூலில் இதன் மகத்துவத்தையும் பல வகையான லஸ்ஸி தயாரிப்பு முறைகளைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செரிமானம் :

செரிமானம் :

லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்கும் :

வயிற்றுக் கோளாறுகள் நீங்கும் :

மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.

எலும்புகளை வலுவாக்கும் :

எலும்புகளை வலுவாக்கும் :

லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

உடனடி எனர்ஜி :

உடனடி எனர்ஜி :

வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 குறைபாட்டு நோய் நீங்கும்.

தசைகளை வலிமையாக்கும் :

தசைகளை வலிமையாக்கும் :

லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு. கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Lassi

Health Benefits of Lassi
Story first published: Friday, September 22, 2017, 12:27 [IST]