Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் பாவற்காய் அளிக்கும் பயன்கள் என்னென்ன?
உடல் உறுப்பு சார்ந்து பாவற்காய் அளிக்கும் ஆரோக்கிய பயன்கள் குறித்து இங்கு கூறப்பட்டுள்ளது.
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள். அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் தான் உரிமையுடன் திட்டுவார்கள். அப்படி தான் பாவற்காய். சாப்பிட்டால் கசப்பாக இருந்தாலும் வேப்பிலை போல மிக சிறந்த நன்மைகள் அளிக்கும் உணவாக திகழ்கிறது பாவற்காய்.
உடலில் தங்கி உடல்நல குறைபாடுகளை உண்டாக்கும் நச்சுக்களை அளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது பாவற்காய்....

பாவற்காயில் இருக்கும் சத்துக்கள்!
- நீர் - 92%
- புரதம் - 11.5%
- மாவுப்பொருள் - 4%
- கொழுப்பு - 0.2%
- தாது உப்புக்கள் - 0.8%
- கால்சியம் - 0.02%
- பாஸ்பரஸ் - 0.07%
- இரும்புத்தாது - 2.2 யூனிட்
- வைட்டமின் A - 210
- யூனிட் வைட்டமின் B - 24
- யூனிட் வைட்டமின் C - 88 யூனிட்

நரம்புகள்!
நரம்புகளின் வீரியம் அதிகரிக்க பாவற்காய் பயனளிக்கிறது. இது ஒரு சிறந்த விஷ முறிவாகவும் விளங்குகிறது.

வயிறு!
வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை அழிக்க உதவுகிறது.

கல்லீரல்!
கல்லீரல் வீக்கம் சரி ஆகவும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் திகழ்கிறது பாவற்காய்!

கல் அடைப்பு!
கல் அடைப்பு, மூல வியாதி போன்றவை சரியாக சிறந்த உணவு பொருள் பாவற்காய்!

குறிப்பு!
உடல்நல குறைபாடு காரணமாக மருந்துகள் உட்கொண்டிருக்கும் நபர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பாவற்காய் உட்கொள்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications
