இந்த பொருட்களை நீரில் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

ஒரு நல்ல நாளின் தொடக்கம் அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதாவது, காலையில் எழுந்ததும் சிறிது உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை செய்யும் போ மனம் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

அதேபோல் தான் உடலின் ஆரோக்கியம் என்பது அன்றைய நாளில் நாம் முதலில் சாப்பிடுவதை பொருத்து அமையும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் புகை பிடித்தால் என்ன நடக்கும். உடலில் உள்ள அமிலங்களுக்கெல்லாம் இது விருந்தாக இருக்கும். இதனால், உடலில் சீக்கிரம் பாதிப்பு ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.

7 infusions than can increase your metabolism faster

இதற்கு பதிலாக நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அழகை மேம்படுத்தவும் பெரிதும் உதவக்கூடியது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமென்றால், தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர் லொவெனெத் பாத்ரா கூறியதாவது, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, ஈரப்பதத்தை தக்கவைக்க, செரிமானத்தை மேம்படுத்த அல்லது சரும பொலிவை தருவதற்கு மற்றும் அடர்த்தியான முடியையும் கூட பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும், உடலில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வாருங்கள் இப்போது வெறும் வயிற்றில் தண்ணீர் கலந்து குடிக்கக்கூடிய 7 பொருட்களை பற்றியும், அவற்றை குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மை பற்றியும் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓமம் கலந்த நீர்

ஓமம் கலந்த நீர்

ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஓற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யக்கூடியது. மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.

 சீரகம் கலந்த நீர்

சீரகம் கலந்த நீர்

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த நீர் அனைவருக்கும் மிக நல்லது. ஏனென்றால், இது குடிப்பதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.

பார்லி கலந்த நீர்

பார்லி கலந்த நீர்

ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து 1 டம்ளராகும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலை எழுந்து வடிகட்டி குடிக்க வேண்டும். இது உடலில் சிறுநீரை பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவும்.

 கொத்தமல்லி விதை கலந்த நீர்

கொத்தமல்லி விதை கலந்த நீர்

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த மிகவும் உதவும்.

வெந்தயம் கலந்த நீர்

வெந்தயம் கலந்த நீர்

இரவு படுக்கும் முன்பு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு தூங்குங்கள். காலை எழுந்ததும் அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

அருகம்புல் தண்ணீர் அல்லது ஜூஸ்

அருகம்புல் தண்ணீர் அல்லது ஜூஸ்

ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்தோ அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸோ வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

 உருளைக்கிழங்கு நீர்

உருளைக்கிழங்கு நீர்

சில உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க, உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

English summary

7 infusions than can increase your metabolism faster

7 infusions than can increase your metabolism faster
Story first published: Wednesday, June 21, 2017, 11:20 [IST]