For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது? எதனால் தெரியுமா?

சில உணவுகளை நாம் பச்சையாக சாப்பிட்டால் பாதிப்பை தரும். எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் பச்சையாக சாப்பிடக் கூடாது என்று இக்கட்டுரை விளக்குகிறது.

|

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் சிலவகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அவ்ற்றிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட் ஜீரணிக்காது. அதோடு ஜீர்ண மண்டல்த்திற்கும் பாதிப்பை தரும்.

இன்னும் சில உணவுகள் மோசமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். அவை கடுமையான விளைவுகளை தரும். ஆகவே அவ்வாறான உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி எந்தெந்த உணவுகளை நீங்கள் சாப்பிடக் கூடாது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கை வேக வைத்து அல்லது வறுத்தோ சாப்பிட எனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும் சிலர் பச்சையாகவே மென்று முழுங்குவார்கள்.

இதிலுள்ள ஸ்டார்ச் ஜீரணமடையாது. வாயு, உப்புசத்தை தரும். அதுபோலவே பச்சையாக இருக்கும் உருளையில் சோலானைன் என்ரு பொருள் விஷத்தன்மை கொண்டதால் அதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

முளைக்கட்டிய பயிறு :

முளைக்கட்டிய பயிறு :

முளைகட்டிய பயிறு வகைகளில் முளைக்கட்டும்போது ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புள்ளது. இதனை சாப்பிடுவதால் உடல் பாதிப்பு உண்டாகும். இவற்றை குழந்தைகள், கர்ப்பிணிகல் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் சாப்பிடுதலை தவிர்க்க வேண்டும்.

சிவப்பு பீன்ஸ் :

சிவப்பு பீன்ஸ் :

சிவப்பு பீன்ஸை சமைக்காமல் சாப்பிடுவதால் மிகவும் மோசமாக வனதி, பேதி மற்றும் மயக்கம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. அதில் அதிகப்படியாக இருக்கும் லெக்டின் மற்றும் ஃபைடோஹீம்அளூடினின் என்ற வேதிப் பொருட்களே இதற்கு காரணம்.

தேன் :

தேன் :

தேன் மிகவும் நல்லதுதான். ஆனால் தேனிலுள்ள க்ரேயனோடாக்ஸின் என்ற பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும். எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதனை ஏதாவது பொருளுடன் கலந்து சாப்பிடவேண்டும். தனியாக சாப்பிடக் கூடாது.

மரவள்ளி கிழங்கு :

மரவள்ளி கிழங்கு :

மரவளிக் கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதோடு அதிகமாக பெரிய மூலக்கூறு கொண்ட சத்துக்கள் மற்றும் சயனைடு இருக்கிறது. இவைகளை சமைத்து சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் சயனைடு விஷத்தன்மை கொண்டு உடலுக்கு பாதிப்பை தருகிறது.

பால் :

பால் :

பாலை நிறைய பேர் பச்சையாக குடிப்பார்கள். ஆனால் அதனை நன்றாக காய்ச்சி குடிக்கவில்லையென்றால், அதிலுள்ள கிருமிகள் குடல் நோய்களை உருவாக்கிவிடும். காய்ச்சி குடிப்பதால் சத்துக்கள் வீணாகும் என்ற தவறான கருத்து உருவாகியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Foods you should never eat raw

6 Foods you should never eat raw, are described here.
Story first published: Tuesday, February 14, 2017, 15:32 [IST]
Desktop Bottom Promotion