கிவி ஒரு அற்புத பழம் ! ஏன் தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உங்கள் உடல் போதிய போஷாக்கில்லாமல் இருக்கிறதா? சரியான சத்து கிடைக்கவில்லை. நிறைய பழங்கள் டாக்டர் சாப்பிட சொல்லியிருக்கார். ஆனால் அவைகளை வாங்க வேண்டும், உரித்து சாப்பிட வேண்டும் என்று வாழைப் பழ சோம்பேறிகளும் உங்களுக்குள் இருப்பார். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வ தரும் பழத்தை பற்றி தெரியுமா? அதுதான் கிவி.

Why you must eat kiwi fruit daily

கிவி பழம் தோற்றத்தில் அழகாய் இருப்பது போல் அதன் சுவையும் அருமையாக இருக்கும். அதன் சத்துக்கள் அத்தனை நன்மைகளை உடலுக்கு அளிப்பவை. நிறைய விட்டமின்களும், மினரல்களும் அடங்கியவை. தினமும் அதனை சாப்பிட்டால் என்னென்ன தேவைகளை நிவர்த்தி செய்யும் என பார்க்கலாம்.

இரும்பு சத்து :

கிவி பழத்தி 4 சதவீத இரும்பு சத்து உள்ளது. தினமும் அதனை பெரியவர்களும் குழந்தைகளும் சாப்பிட்டால் ரத்த சோகை எற்படாமல் காக்கும்,. கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் ரத்த உற்பத்தி ரெட்டிப்பாக்கும்.

Why you must eat kiwi fruit daily

ஃபோலிக் அமிலம் :

ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய தேவையான சத்து. இது அதிகம் கிவி பழத்தில் உள்ளது. மருந்துக்களை நாடாமல் இதனை உண்ணலாம். ரத்த செல்களை அதிகரிக்கும். உடலில் சக்தி இழக்கும் தருணங்களில் பலத்தை தூண்டும்.

கால்சியம் :

கால்சியம் நம் உடலை தாங்கும் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கும், உருவாவதற்கும் தேவை. இது கிவி பழத்தில் அதிகம் உள்ளது. இதில் மெக்னீசியமும் அதிகம் உள்ளது. இது செல்களின் இயக்கங்கள் நன்றாக செயல்பட மற்றும் கால்சியம் சத்துக்களை உறிய தேவைப்படுகிறது.

Why you must eat kiwi fruit daily

விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் :

கிவி பழத்தில் ஆரஞ்சை விட அதிக விட்டமின் சி யும், வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசிய சத்தும் உள்ளது. அதேபோல், அவகாடோவை விட அதிக அளவு விட்டமின் ஈ கொண்டுள்ளது. அதோடு உடலுக்கு தேவையான காப்பர், மேங்கனீஸ் ஆகியவைகளும் உள்ளது.

நார்சத்து :

கிவி பழத்தில் அதிக நார்சத்து உள்ளது. குடலின் ஆரோக்கியமான இயக்கத்திர்கு நார்சத்து அவசியம். கிவி பழம் தினமும் சாப்பிடுவதால் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும்.

Why you must eat kiwi fruit daily

இது தவிர கிவி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. உடலில் உண்டாகும் கிருமிகளை கொல்கிறது. அதோடு மேலாக ஜீரணத்தை உண்டாக்கும் என்சைம்களின் செயல்களை தூண்டுகிறது.

இவ்வளவு நன்மைகளை தரும் இந்த கிவி ஒரு அற்புத பழம்தானே? இப்போ சொல்லுங்கள்.

English summary

Why you must eat kiwi fruit daily

Why you must eat kiwi fruit daily
Story first published: Monday, August 1, 2016, 18:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter