ஆண்கள் தவிர்க்க வேண்டிய வெள்ளை 5 உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

வெள்ளை இயற்கையாக சமாதானத்திற்கான நிறமாக இருப்பினும், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு சற்றே ஒதுக்கி வைக்க வேண்டிய நிறம் தான்.

ஆம், நமது முன்னோர்கள் அதிகமாக அரிசி, மைதா போன்ற வெள்ளை உணவுகளை சேர்த்துக் கொள்ளாததால் தான் மிகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.

இதற்கு காரணம் கார்ப்ஸ். கார்ப்ஸ் உடலில் அதிகம் சேருவதால், உடலில் கொழுப்பு செல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தினமும் அரிசு உணவுகள் மட்டுமே அதிகமாக உண்டு வந்தால் உடல் பருமன் கூடும்.

இதையும் படிங்க: ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு கலவைகள்!

குறிப்பாக தினமும் பல மணிநேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் போன்றவர்கள் தினமும் வெள்ளை உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இனி, ஆண்கள் அதிகமாக உட்கொள்ள கூடாத ஐந்து வெள்ளை உணவுகள் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு #1

உணவு #1

பிரெட்!

ஆண்களின் ஆரோக்கியத்திற்கு அபயாமாக அமையும் வெள்ளை உணவுகளில் முதன்மை வகிப்பது இந்த பிரெட் தான். மைதா கொண்டு தயாரிக்கப்படும் இந்த வெள்ளை உணவு உடலில் கார்ப்ஸ் அளவு அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

நீங்கள் தானியம் அல்லது கோதுமை பிரெட் உண்பவராக இருப்பினும் கூட, இதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

உணவு #2

உணவு #2

பால் உணவுகள்!

பால் உணவுகள் உடலுக்கு அத்தியாவசியமானவை தான். ஆனால், ஆண்கள் இதை அதிகளவில் உட்கொள்ள கூடாது.

அதிகமான பால் உணவு செரிமான கோளாறுகள் மற்றும் உடல் பருமன் அதிகரிக்க செய்யும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உணவு #3

உணவு #3

பாஸ்தா!

சுத்திகரிக்கப்பட்ட மாவு கொண்டு தயாரிக்கப்படும் பாஸ்தா உடலில் கொழுப்பு செல்கள் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

இதனால் அதிகரிக்கும் வேகமாக அதிகரிக்கும் உடல் பருமன், இரத்த ஓட்டத்தில் குறைபாடு, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பதில் குறைப்பாடு, ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்பட காரணியாக இருக்கிறது.

உணவு #4

உணவு #4

வெள்ளை அரிசி!

முன்பெல்லாம் நமது ஊர்களில் தினமும் வெள்ளை அரிசி உட்கொள்ளும் வாடிக்கை இல்லவே இல்லை.

மாறாக, தானியங்கள், கம்பு, ராகி, நீராகாரம் போன்றவற்றை தான் அதிகமாக உட்கொண்டானர்.

உணவு #4

உணவு #4

ஆனால், இப்போது நாம் இட்லி, தோசை, சாப்பாடு என நாள் முழுக்க பெரும்பாலும் வெள்ளை அரிசி உணவை தான் உட்கொண்டு வருகிறோம்.

இதனால் உடலில் கூடுதல் எடை சேர வாய்ப்புகள் ஏராளம். எனவே, தினமும் வெள்ளை அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

உணவு #5

உணவு #5

கேன் ஜூஸ்!

நீங்கள் குடிக்கும் கேன் ஜூஸ்களில் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு உண்டாகும் அபாயம் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Men Should Avoid White Food

Why Men Should Avoid White Food, read here in tamil.