கத்திரிக்காய் சாப்பிட்டால் ஏன் அலர்ஜி உண்டாகிறது?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

கத்திரிக்காய் சைவப் பிரியர்களுக்கு மீன் போன்றது. சுவையும் அருமையாக இருக்கும். எண்ணெய் கத்தரிக்காய் புகழ் பெற்ற உணவு வகைகளில் ஒன்று. அதுவும் நல்லெண்ணெய் மற்றும் பிஞ்சு கத்திரிக்காயில் செய்யும் எந்த சமையலுமே ருசியை அபாரமாக மாற்றும்.

Why Brinjal Induces Allergy

ஆனால் கத்திரிக்காயை எல்லாரும் சாப்பிட முடியாது சிலருக்கு அதை சாப்பிட்டதும் அல்ர்ஜி உண்டாகும். சிறிய பாதிப்பிலிருந்து பெரிய பாதிப்பு வரை உடம்பின் தன்மைப் பொறுத்து மாறும். கத்திரிக்காயினால் ஏன் அலர்ஜி உண்டாகிறது? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கத்திரிக்காயின் சத்துக்கள் :

கத்திரிக்காயின் சத்துக்கள் :

நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

கத்திரிக்காயின் நன்மைகள் :

கத்திரிக்காயின் நன்மைகள் :

இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. நச்சுக்களை வெளியேற்றும் மிக முக்கிய வேலையை செய்வதில் முதலிடம் பெறுகிறது. புற்று நோய் வராமல் காக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

கத்திரிக்காயின் நன்மைகள் :

கத்திரிக்காயின் நன்மைகள் :

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். சிறு நீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கொழுப்பை கரைக்கிறது.

கத்திரிக்காயின் நன்மைகள் :

கத்திரிக்காயின் நன்மைகள் :

கத்திரிக்காயிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. இதய நோய்கள் வராமல் காக்கிறது. மூளை செல்களை பாதுகாக்கிறது. சருமத்தை மென்மையாக்கும்.

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?

கத்திரிக்காயில் உள்ள புரொட்டின் தான் அலர்ஜியை உண்டாக்குகிறது. முட்டை உருளைக் கிழங்கு ஏன் தக்காளியும் கூட சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதற்கு காரணம் அதில் அதிகப்படியான சோலனைன் மற்றும் ஹிஸ்டமின் இருப்பதே ஆகும்.

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?

சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும். இதனால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல், காய்ச்சல் ஆகியவை உண்டாக்கும்.

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?

ஹிஸ்டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். நமது உடலிற்கு ஒவ்வாத பொருள் நுழைந்துவிட்டால், பாம்பு விஷத்தை உமிழ்வது போல, நமது உடலிலுள்ள ஒரு வகை செல்கள்(mast cells ) நச்சுக்கள் கொண்ட ஹிஸ்டமினை அலர்ஜி செல்களை நோக்கி ஏவும். அந்த ஒவ்வாத பொருள் வெளியேறும் வரை அலர்ஜியை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். இதனால்தான் சரும அலர்ஜி, கொப்பளம், அரிப்பி தடிப்பு என ஏற்படுகிறது. இந்த ஹிஸ்டமின் கத்திரிக்காயில் அதிகம் உள்ளது. எனவேதான் அலர்ஜி உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Brinjal Induces Allergy

Why Brinjal Induces Allergy
Story first published: Tuesday, September 6, 2016, 13:38 [IST]
Subscribe Newsletter