வாந்தி வருவதற்கு ஃபோபியாவும் காரணமா? வாந்தியை பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்!

Written By:
Subscribe to Boldsky

வாந்தி உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. வெறும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை என மட்டும் நினைத்தால் அது தவறு. பல்வேறு பிரச்சனைகளின் தொடர்பாக வாந்தி வரலாம்.

வாந்தி உண்டாவதற்கு எது முக்கிய காரணம் என கண்டறிந்து அதன் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்வது முக்கியம். அதற்கு முன் எதனாலெல்லாம் வாந்தி வருகிறது என நீங்கள் அறியாத பல விஷயங்கள் உள்ளது. இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுக் கிருமிகள் மட்டும் காரணமல்ல :

வயிற்றுக் கிருமிகள் மட்டும் காரணமல்ல :

சிறுவர்களுக்கு அடிக்கடி வாந்தி வந்தால் அது ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக அல்லது தொண்டையில் ஏற்பட்ட தொற்று காரணமாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு அடிக்கடி தொடர்ந்து வாந்தி வந்தால் அது அமிலத்தன்மை அதிகமாகும்போது உண்டாகும் பிரச்சனையால் வருவதாகும். பெரியவர்களுக்கு குடலில் ஏதாவது அடைபட்டிருந்தால் வாந்தி உண்டாகும்.

 நிறம் :

நிறம் :

சாதரணமாக வாந்தி வெள்ளை அல்லது மஞ்சளாக சாப்பிட்ட உணவின் நிறத்திற்கேற்ப வரும். ஆனால் கருப்பாகவோ, செக்க சிவப்பாகவோ அல்லது கருப்பு திராட்சை நிறத்திலோ வந்தால் அது சாதரண விஷயமல்ல.

ரத்தத்தை வெளியேற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை காண வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு :

கர்ப்பிணிகளுக்கு :

கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் வரும் வாந்தியால், கருசிதைவு உண்டாவது தடுக்கப்படுகிறது.

ஆகவே கர்ப்பிணிகளுக்கு வாந்தி உண்டாவது ஆரோக்கியமான விஷயம் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் கூறியிருக்கிறது.

அதே சமயம் அதிகப்படியான வாந்தி நீரிழப்பை உண்டாக்கிவிடும். ஆகவே நீர் அதிகமாக உட்கொள்ளும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாந்திக்கு காரணமான வைரஸ் :

வாந்திக்கு காரணமான வைரஸ் :

நார்த் கரோலினா ஸ்டேட் பல்கலைக் கழக்த்தின் ஆராய்ச்சியாளர்கள் எதனால் வாந்தி உண்டாகிறது என அறிய ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார்கள்.

இந்த இயந்திரத்தின் மூலமாக நோரோ வைரஸ் என்ற வைரஸ் கிருமிதான் வாந்தியை ஏற்படுத்தியது என தெரிய வந்துள்ளது. இந்த கிருமி எவ்வாறு பரவுகிறது எனவும் இந்த இயந்திரத்தின் மூலம் அறிய முடிந்தது.

சீஸ் போன்ற வாசனை :

சீஸ் போன்ற வாசனை :

பிரவுன் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது. ஒரு ரசாயன பொருளை உருவாக்கி அங்குள்ள மக்களிடம் நுகரச் செய்த போது அவர்கள் அதனை சீஸ் என்று சொல்லி மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதே போல் சிலர் அதே பொருளை வாந்தியின் வாசனை என்று சொல்லி அதனை ஆட்சேபித்தனர்.

எனவே அதன் வாந்தியில் உண்டாகும் வாசனை எப்படி வேறொரு பொருளின் வாசனையை உண்டக்குகிறது என ஆய்வு செய்கின்றனர்.

இது ஃபோபியாவாக இருக்கலாம்?

இது ஃபோபியாவாக இருக்கலாம்?

சிலருக்கு வேரு யாராவது வாந்தி எடுப்பதை பார்த்தால் தானும் வாந்தி எடுப்பாகள். அல்லது யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலோ, அழுக்கான பகுதிகளுக்கு வந்தாலோ வாந்தி வரும்.

இன்னும் சிலர் தனது உடல் நிலைப் பற்றி அநாவசியமான கற்பனை பயத்தினால் வாந்தி உண்டாகும். இது ஒரு வகை சுபாவம் இதற்கு "எமிட்டோஃபோபியா என்று பெயர்.

உயிருக்கு ஆபத்தான விஷயம் :

உயிருக்கு ஆபத்தான விஷயம் :

வாந்தி தொடர்ந்து உண்டாகிக் கொண்டிருந்தால் உடலில் முழுவதும் நீரிழப்பு உண்டாகும். இதுல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் . நினைவை இழக்கும் நிலைக்கும் கொண்டு போய் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown things of Vomiting

Things you might not be knowing about Vomiting,
Story first published: Monday, October 3, 2016, 18:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter