Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் டாப் 10 உணவுகள்!
நிறைய ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் ஒல்லியாக தசைகளின்றி எலும்பும் தோலுமாக காணப்படுவார்கள். அத்தகையவர்கள் தாங்கள் குண்டாக மாட்டோமா என்றெல்லாம் வேதனைக் கொள்வார்கள். அதற்காக நிறைய முயற்சிகளையும் எடுப்பார்கள். அதில் ஒன்று ஜிம்மில் சேர்வது.
தசைகளின் வளர்ச்சிக்கு உடற்பயிற்சி மட்டும் உதவாது. அதன் வளர்ச்சிக்குத் தேவையான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். தசைகள் நன்கு வளர்ச்சிப் பெற புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. இச்சத்து நிறைந்த உணவுகளை உடற்பயிற்சி செய்து கொண்டே உட்கொண்டு வந்தால், தசைகள் நன்கு வளர்ச்சிப் பெற்று, நீங்கள் குண்டாக காட்சியளிக்கலாம்.
சரி, இப்போது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் டாப் 10 உணவுகள் குறித்துக் காண்போம்.

சீமை திணை
இறைச்சியில் மட்டும் தான் புரோட்டீன் உள்ளது என்று நினைக்க வேண்டாம். தென் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சீமை திணையிலும் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன் மட்டுமின்றி 9 வகையான அமினோ அமிலங்களும் உள்ளது. மேலும் இது க்ளுட்டன் இல்லாதது என்பதால் எள்தில் செரிமானமாகக் கூடியது மற்றும் இதில் நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் உள்ளது.

பாதாம்
தாவர வகை உணவான பாதாமிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. 1/4 கப் பாதாமில் 8 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் இதில் இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் மக்னீசியம் ஏராளமாக உள்ளது. எனவே தசைகள் நன்கு வளர்ச்சிப் பெற வேண்டுமானால், தினமும் பாதாமை சாப்பிடுங்கள்.

காட்டேஜ் சீஸ்
பெரும்பாலான பாடிபில்டர்கள் உடலை அப்படி வைத்திருப்பதற்கு சீஸ் முக்கிய காரணம். ஏனெனில் பாடிபில்டர்கள் கொழுப்பு குறைவான காட்டேஜ் சீஸைத் தான் தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.

கடல் சிப்பி
கடல் சிப்பியில் ஜிங்க் மட்டுமின்றி, புரத சேர்க்கைக்குத் தேவையான மக்னீசியமும் அதிகம் உள்ளது. எனவே உங்களுக்கு தசைகள் நன்கு வளர்ச்சிப் பெற வேண்டுமானால், கடல் சிப்பியை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாக்லேட் பால்
சாக்லேட் பாலை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், அதன் மூலம் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கிடைத்து, தசைகளும் நன்கு வளர்ச்சி பெறும்.

மாட்டிறைச்சி
தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் புரோட்டீன்கள் ஏராளமாக உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி12, ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

சோயா பொருட்கள்
பால் பொருட்களைப் போன்றே சோயா பொருட்களிலும் புரோட்டீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் தசைகளின் வளர்ச்சிக்கு உதவி புரியும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளது என்பதால், குண்டாக நினைப்பவர்கள் சோயா பொருட்களை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும்.

முட்டை
ஒவ்வொரு முட்டையிலும் 5-6 கிராம் புரோட்டீனும், குறைவான கலோரிகளும் உள்ளது. ஆகவே தசைகள் நன்கு வளர உடற்பயிற்சியுடன் தினமும் முட்டைகளை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள். அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவில் தான் புரோட்டீன் அதிகம் உள்ளது என்பதால், மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளை கருவை மட்டும் அதிகம் உட்கொள்ளுங்கள்.

சிக்கன்
தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும் என அனைவருக்கும் தெரிந்த ஓர் உணவு தான் சிக்கன். தோல் நீக்கப்பட்ட 10 கிராம் சிக்கனில் 31 கிராம் புரோட்டீன் உள்ளது. அதிலும் அந்த சிக்கனை வறுத்து அல்லது பொரித்து உட்கொள்ளாமல், வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.

மீன்
மீன்களும் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். அதிலும் சால்மன் மீனில் தான் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் 100 கிராம் சால்மன் மீனில் 25 கிராம் புரோட்டீன் உள்ளது என்றால் பாருங்கள். ஆகவே உங்களுக்கு தசைகள் நன்கு வளர்ச்சி பெற வேண்டுமானால், முடிந்த அளவில் தினமும் மீனை உணவில் சேர்த்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications