For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் நீங்க விரும்பி சாப்பிடும் இதெல்லாம் தான் மூளை சேதம், உடல் பருமன் அதிகரிக்க காரணம்!

|

அஸ்பர்டைமைக் என்பது ஒரு பிரபலமான செயற்கை இனிப்பூட்டி ஆகும். இந்த செயற்கை இனிப்பூட்டி கடந்த 30 வருடங்களாக பல்வேறு உணவு தயாரிப்பி தொழிற்சாலைகளில் அதிகமாக பயன்படுத்தி வரப்படுகிறது.

இந்த இனிப்பூட்டியை பயன்படுத்த வேண்டாம் என ப ஆய்வுகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தும் கூட இன்றளவும் இந்த செயற்கை இனிப்பூட்டி பல உணவுப் பொருட்கள் தயாரிப்பில் சேர்க்கப்பட்டு தான் வருகிறது.

இந்த இனிப்பூட்டியை நீங்களும் தினமும் உட்கொண்டு தான் வருகிறீர்கள். ஆனால்,உங்களுக்கே தெரியாமல், நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளின் மூலமாக இது உங்கள் உடலில் கலந்துக் கொண்டிருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்பர்டைமைக்!

அஸ்பர்டைமைக்!

இது மூன்று அபாயகரமான நச்சுத்தன்மை கொண்டுள்ள மூலப்பொருட்கள் கலப்புடன் தயாராகியது. ஆஸ்பார்டிக் அமிலம், பினைலானைனில், மற்றும் மெத்தனால். இவை மூன்றுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை தான்.

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றம்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றம்!

செயற்கை இனிப்பூட்டிகள் இப்போது சர்க்கரைக்கு சிறந்த மாற்று என்ற கண்ணோட்டத்தில் மக்கள் உட்கொண்டு வருகின்றனர்.

இது, நாள்பட மக்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரிக்க, வளர்சிதை மாற்றத்தில் கோளாறு உண்டாக, அதனால் நீரிழிவு நோய் அபாயம் ஏற்பட காரணியாக இருக்கிறது.

எப்.டி.எ

எப்.டி.எ

அமெரிக்க உணவு கட்டுப்பாடு அமைப்பான எப்.டி.எ அபாயகரமானது என கூறியுள்ளது. எதிர்பாராத விதமாக அல்சருக்கான மருந்து கண்டுபிடிக்க முயன்ற போது, இந்த செயற்கை இனிப்பூட்டி கண்டுப்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இதன் அபாயம் அறியாமல் எப்.டி.எ அங்கீகரித்தது. ஆனால், பின்னாளில் இதன் அபாயம் அறிந்து, இதை தடைசந்தையில் விற்க கூடாது என கூறியது.

பாக்டீரியாவின் கழிவு!

பாக்டீரியாவின் கழிவு!

மற்றுமொரு முகம் சுளிக்க வைக்கும் உண்மை என்னவெனில், மரபணு முறையில் மாற்றப்பட்ட ஈ.கோலி எனும் பாக்டீரியாவின் கழிவுகள் கொண்டு இந்த செயற்கை இனிப்பூட்டி தயாரிக்க படுகிறது.

இரத்தம் - மூளை | தடை!

இரத்தம் - மூளை | தடை!

அஸ்பர்டைமைக் எனும் இந்த செயற்கை இனிப்பூட்டியில் 40% ஆஸ்பார்டிக் அமிலம் இருக்கிறது. இது ஒரு அமினோ அமிலத்தின் அமைப்பு ஆகும். இது மூளைக்கு செல்லும் இரத்தத்தை தடை செய்யத்தக்கது.

நியூரல் சேதம்!

நியூரல் சேதம்!

இதனால், மெல்ல, மெல்ல மூளையின் செல்கள் சோர்வடையும். மூளையின் செயற்திறன் குறையும், மூளை சேதம் அடைய துவங்கும்.

மேலும், இதனால், நியூரல் செல் சேதம் அடைவதால் மூளை நாள்பட அபாயமான நிலையை எட்டலாம்.

அல்சைமர்!

அல்சைமர்!

இதனால் மறதி உண்டாக்கும் நோயான அல்சைமர், மற்றும் கால்-கை வலிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகவும் வாய்ப்புகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Popular Artificial Sweetener May Be Causing You Cancer, Obesity and Brain Damage

This Popular Artificial Sweetener May Be Causing You Cancer, Obesity and Brain Damage
Story first published: Friday, September 16, 2016, 12:46 [IST]
Desktop Bottom Promotion