Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
அதிக கொலஸ்ட்ரால் உணவு சாப்பிட்டதும் இதெல்லாம் நீங்க பண்ணுங்க!!
கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது தவறில்லை. ஏனெனில் கொழுப்பு உடலிற்கு மிக அவசியம். ஆனால் அதற்கு தகுந்த வேலை செய்ய வேண்டும் அல்லது இங்கே சொன்ன விஷயங்களை செய்தால் கொழுப்பு வேகமாய் எரிக்கப்படும்.
எல்லா சமயங்களிலும் டயட் பற்றியே யோசிக்க முடியாது. அவ்வப்போது நமது நாக்கிற்கும் மதிப்பு அளிப்போம். என்றைக்காவது அப்படி சாப்பிடுவதல் தவறில்லை.


இளஞ்சூடான நீர் :
எந்த ஒரு சமயத்தில் கொழுப்பு உணவு சாப்பிட்டதும் உடனே வெதுவெதுப்பான சூட்டில் நீரை குடித்தால் விரைவில் செரித்து அதிக கலோரியை எரிக்க உதவும்.

படுக்கைக்கு நோ :
வயிறு முட்ட சாப்பிட்டு உடனே தூங்கச் செல்வது பெருந்தவறு. அவ்வாறு செய்தால் கொழுப்பு எரிக்கப்படாமல் சேமித்தி வைக்கப்படும். இதனால் உடல் பருமனாகும்.

சில்லென்று குடிக்க கூடாது :
கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் குளிர்ந்த ஜூஸ் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதனால் வயிறு, கல்லீரல், சிறு குடல் பாதிப்படையும்.

10 நிமிட நடை :
நன்றாக சாப்பிட்டதும் காலாற ஒரு 10 நிமிடம் நடப்பது நீங்கள் உங்கள் இரைப்பைக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை. ஏனெனில் செரிப்பதற்கு நடை உதவும்.

மிளகு மற்றும் தேன் :
கொழுப்பு உணவு சாப்பிட்டதும் மிளகு சாப்பிடுவது நல்லது. இது கலோரி எரிப்பதை துரிதப்படுத்தும்.
மிளகை தேனோடு கலந்து சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். கொழுப்புகளை கரைப்பதற்கு இவை உதவும்.

திரிபலா :
திரிபலா ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டபின் இதனை எடுத்துக் கொண்டால் குடல்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் திரிபலா பொடியை கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
