Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!
நீங்கள் எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியவில்லையா? அப்படியெனில் உங்கள் உடலில் ஸ்டாமினா மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். உடலில் ஸ்டாமினா போதிய அளவில் இருந்தால் தான் உடலினுள் நடைபெறும் வழக்கமான செயல்பாடுகள் சீராக நடக்கும்.
நாள் முழுவதும் களைப்புடன் இருப்பது போல் உணர்வதற்கான காரணங்கள்!!!
ஸ்டாமினா இல்லாவிட்டால், எந்த செயலையும் செய்ய முடியாமல் நமக்கே நம்மீது ஒருவித எரிச்சல் ஏற்படும். உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் ஸ்டாமினா சீரான அளவில் இருக்கும்.
இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. உடலில் ஆற்றலை அதிகரிக்க கார்போஹைட்ரேட் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே உங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி உட்கொள்ளுங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் குறிப்பிட்ட ஹார்மோர்களின் உற்பத்திக்கு உதவும். ஒருவர் வாழைப்பழத்தை உடற்பயிற்சி செய்யும் முன் உட்கொண்டால், நீண்ட நேரம் நன்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

காபி
காபியில் காப்ஃபைன் ஏராளமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. காப்ஃபைன் என்னும் பொருள், மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி நம்மை சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யும். எனவே நீங்கள் சுறுசுறுப்பின்றி இருப்பது போல் உணர்ந்தால், ஒரு டம்ளர் காபியைக் குடியுங்கள்.

அவகேடோ/வெண்ணெய் பழம்
அவகேடோ என்னும் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது மற்றும் இது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜனை வழங்கி, உடலின் ஸ்டாமினாவை மேம்படுத்தும். ஆகவே முடிந்தால், தினமும் ஒரு டம்ளர் அவகேடோ மில்க் ஷேக் குடித்து வாருங்கள்.

முட்டை
முட்டை மிகவும் சிறப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். ஒருவர் தினமும் ஒரு முட்டையை உட்கொண்டு வந்தால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம். ஏனெனில் இதில் புரோட்டீன் அதிகமாக உள்ளுது மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

ஓட்ஸ்
இது மற்றொரு ஆரோக்கியமான காலை உணவு. ஓட்ஸில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதனை காலை உணவாக உட்கொண்டால், நாள் முழுவதும் உடலில் ஸ்டாமினா நீடித்து நிலைத்திருக்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற உணவும் கூட.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக உடலினுள் வினைப்புரியும் போது, உடலின் ஆற்றல் மேம்படுவதோடு, தசைகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
