Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
என்றும் இளமையாக வைத்திருக்கும் சூப்பர் உணவுகளைத் தெரியுமா?
நமது உடல் 60 சதவீதம் நீரினால் ஆனது. வியர்க்கும்போது நீரில் பொட்டாசியம், சோடியம் ஆகியவை வெளியேறிவிடும்.
தசைகளின் இயக்கத்திற்கும், ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லிற்கு தகவல்களை கடத்துவதற்கும் சோடியம் பொட்டாசியம் மிகவும் முக்கியம். நீர் சரியாக குடிக்காமலிருந்தால் இவற்றில் அளவு குறைந்து தசைப்பிடிப்பு, சதை தொங்குதல், சுருக்கங்கள் போன்றவை ஏற்படும்.

ஆகவே நீர் உடலில் குறையாமலிருக்க, குறிப்பாக வெயில் காலங்களில் நீருடன் , பழச்சாறுகள், நீர்த்தன்மையுள்ள காய்கறிகள், திரவ உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளுதல் மிக முக்கியம்.
நீர்ச்சத்துக் கொண்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ளலாம். இவை இளமையாகவும் நாம் வாழ மிக முக்கியமான உணவு வகைகள்.
லெட்யூஸ் :
லெட்யூஸில் 95 % நீர் உள்ளது. அது தவிர்த்து, ப்ரொட்டின், நார்சத்து, மற்றும் ஒமேகா 3 ஆகியய்வற்றை கொண்டுள்ளது.
உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக வாழ இந்த சத்துக்கள் தேவை. இது குறைந்த் அளவு கலோரி கொண்டது. இதனை வாங்கி இரு நாட்களுக்குள் உண்டால் அதன் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.
ப்ருக்கோலி :
ப்ருக்கோலியில் 89 % நீர் உள்ளது. ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ உதவும் சூப்பர் உணவு வகைகளில் புருக்கோலியும் அடக்கம்.
இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் , பீட்டா கரோடின் உள்ளது. புற்று நோயை தடுக்கும் சக்திவாய்ந்த காய் இது.
ஆப்பிள் :
ஆப்பிளில் விட்டமின் ஏ, ஈ, சி ஆகியவை நிறைந்துள்ளன. 86 % நீர்சத்தும் உள்ளன. கொழுப்பை குறைக்கிறது. ஃப்ரீ ரேடிகள்ஸை அழிக்கும் சக்தி பெற்றது.
யோகார்ட் :
ப்ரோபயாடிக் வகை உணவான யோகார்ட் 85% நீர் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். புரோட்டின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம் நிறைந்தவை.
அரிசி :
அரிசியில் 70 % நீர் உள்ளது. அதோடு, நார்சத்து, விட்டமின், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை உடலில் நீரிழப்பு ஏற்படும்போது சமன் செய்கிறது.
பிரவுன் அரிசி, சிவப்பு அரிசி ஆகியவை ஆன்டி ஆக்ஸிடென்ட் நார்சத்து மற்றும் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தவை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications





