For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் தூங்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க...

|

நாள் முழுவதும் ஓய்வெடுக்காமல் வேலை செய்யும் உடலுக்கு தன்னைத் தானே சரிசெய்து கொள்ள ஓய்வு அவசியம். இரவில் ஒருவர் நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால் தான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

இரவில் நல்ல தூக்கம் கிடைக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் நாம் மாலை அல்லது இரவு வேளையில் சாப்பிடும் சில தவறான உணவுகள் காரணங்களாகும்.

எனவே முதலில் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அந்த தவறான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இதனால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செலரி

செலரி

செலரியில் சிறுநீர்ப்பெருக்கிப் பண்புகள் உள்ளது. இவற்றை மாலை அல்லது இரவு வேளையில் சாப்பிட்டால், நள்ளிரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும். எனவே இந்த உணவுப் பொருளை இரவு வேளையில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகளை தூங்கும் முன் சாப்பிட்டால், அதனால் இரவில் தூக்கத்தைத் தொலைக்க வேண்டியிருக்கும் என சில ஆய்வுகள் கூறினாலும், போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும், இரவில் சாக்லேட் மற்றும் இனிப்பு பலகாரங்களை சாப்பிடாதீர்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டு உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனை இரவு வேளையில் உட்கொண்டால், அதனால் வயிற்றில் அமில உற்பத்தி அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற இடையூறாக இருக்கும்.

மது

மது

உண்மையில் மது தூக்கத்தின் தரத்தைக் குறைத்து, உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கப்பெறாமல் செய்யும். மேலும் மது உடலை வறட்சியடையவும் செய்யும்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீமில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அதில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படாமல், உடலிலேயே தங்கி உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

புகைப்பிடித்தால் பல ஆண்களும் டென்சன் குறைவதாக கூறுகின்றனர். ஆனால் இதைப் பிடித்தால், நுரையீரல் பாதிக்கப்படுவதோடு, இரவில் தூங்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். மேலும் சிகரெட் பழக்கம் குறட்டை மற்றும் தூக்கமின்மையை உண்டாக்கும்.

காபி

காபி

இரவில் தூங்கும் முன் காபி குடிப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் ஓர் பழக்கம். இதற்கு அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள், நம்மை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never Eat These Foods Before Sleeping

Do you know what to avoid at bed time? Well, there are certain foods that kill sleep. Read on to know about them.
Story first published: Wednesday, October 5, 2016, 17:23 [IST]
Desktop Bottom Promotion