Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும்
Chicken Kothu Kari Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக் கறியை செய்து கொடுங்கள்.

இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி சாதம், பிரியாணி மட்டுமின்றி தோசை, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த சிக்கன் கொத்துக்கறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். ஒருமுறை இந்த கொத்துக்கறியை முயற்சி செய்துவிட்டால் இனி அடிக்கடி இதைத்தான் செய்வீர்கள்.
உங்களுக்கு மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்துக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கனை சமைக்க:
- எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
- அரைத்த சின்ன வெங்காயம் - 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 1/2 கப்
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- வர மிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- எலும்பில்லாத சிக்கனை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் சின்ன வெங்காயத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய சிக்கனைச் சேர்த்து, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்த சின்ன வெங்காய விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து, 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் மூடியைத் திறந்து, கரண்டியால் சிக்கனை நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் சோம்பைச் சேர்த்து அது பொரிய விடவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் உடைத்த வர மிளகாயைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய புதிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இப்போது சமைத்த சிக்கனைச் சேர்த்து வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறவும்.
- மசாலா சிக்கனில் நன்றாக கலக்கும் வரை கிளறவும்.
- இறுதியாக ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் அட்டகாசமான சிக்கன் கொத்துக்கறி ரெடி!



Click it and Unblock the Notifications