Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
அதிமதுரம் தேநீர் தயாரிப்பு முறையும், அதனை குடித்தால் உண்டாகும் 5 மருத்துவ நன்மைகள் தெரியுமா?
அதிமதுரம் இயற்கையில் கிடைத்த மருத்துவ மூலிகை. இது பல பிரச்சனைகளை போக்கக் கூடியது. இருமல், தலைவலி சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் நோயின் தீவிரம் குறையும்.
அதிமதுரம் பல அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டது. இது சர்க்கரை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

அதோடு தலைவலிக்கும் ஆறுதல் அளிக்கும். அதிமதுரம் தே நீர் தயாரிக்கும்போது அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்தே தயாரிக்க வேண்டும். சர்க்கரை உபயோகிக்க வேண்டாம்.
அதனை தயாரிக்கும் முறையும் நன்மைகளையும் காண்போம்.

அதிமதுரம் தே நீர் தயாரிக்கும் முறை :
முதலில் உரல் அல்லது கல்லில் அதிமதுரத்தை நன்றாக தட்டிக் கொள்ளுங்கள்.

அதிமதுரம் தே நீர் தயாரிக்கும் முறை :
பின்னர் நீரை கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு பனங்கற்கண்டை சேர்க்கவும்.

அதிமதுரம் தே நீர் தயாரிக்கும் முறை :
பனங்கற்கண்டு கரைந்ததும் அதில் நசுக்கி வைத்திருந்த அதிமதுரத்தை சேர்க்கவும்.5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பின் இறக்கி வைத்து ஆறியது வடிகட்டி குடிக்க வேண்டும்.

நன்மைகள் :
வயிற்று வலி
வயிற்று வலியை போக்கும். வயிறு சம்பனதமான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கும்.

நன்மைகள் :
இருமல் :
இருமலுக்கு குறிப்பாக வறட்டு இருமலுக்கு மிகச் சிறந்த முறையில் தீர்வை தருகிறது.

நன்மைகள் :
மலச்சிக்கல் :
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 4 நாட்களுக்கு இந்த தேநீரை அருந்தினால் விரைவில் குணம் பெறுவார்கள்.

நன்மைகள் :
ஆர்த்ரைடிஸ் :
ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு மூட்டில் வரும் வீக்கத்தினை கட்டுப்படுத்துகிறது.

நன்மைகள் :
மாதவிடாய் வலி :
மாத விடாய் சமயத்தில் இந்த நீரை அருந்துவதால், வலி, தசை பிடிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். புத்துணர்ச்சி உண்டாகும்.

குறிப்பு :
ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பிணிகள் இந்த தேநீரை தவிர்க்கவும். இந்த தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் சிகிச்சைக்காக மிகவும் உதவும். பிரச்சனைகளை சரிப்படுத்தும். ஆனால் சாதரணமாக தினமும் குடிப்பது உகந்ததில்லை.



Click it and Unblock the Notifications
