Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்
க்ரீன் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நன்மைகள் நடக்கும்?
ஆப்பிள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறதோ அவ்வளவு நன்மைகளையும் தருகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் போதும் எந்த நோய்களும் உங்களிய நெருங்காது என்பது 100 சதவீதம் உண்மை. அதிலுள்ள விட்டமின் , மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலுக்கு மிகவும் நன்மைகள் அளிக்கக் கூடியவை.

ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்கள் உடலில் அனைத்துவிதமான நோய் எதிர்ப்பு செல்களையும் தூண்டுகின்றன. அதுவும் க்ரீன் ஆப்பிளில் உள்ள சத்துக்கள் சிவப்பு ஆப்பிளை விட அதிகம் என கூறுகின்றனர். தினமும் க்ரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வீர்களா?
மலச்சிக்கலை குணப்படுத்தும் :
க்ரீன் ஆப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்சத்துக்கள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை ஏற்படாது.
எலும்புகளுக்கு பலம் :
க்ரீன் ஆப்பிளில் அனைத்து முக்கியமான மினரல்களும் உள்ளன. கால்சியம் , பாஸ்பரஸ், காப்பர், மெக்னீசிய, போன்ற சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
குடல் புற்று நோயை தடுக்கும் :
க்ரீன் அப்பிள் குடலிலுள்ள பாதிப்புகளை சரிசெய்கிறது. அதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் குடலில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்களை அகற்றி குடல் இயக்கத்தை பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை தூண்டும் :
உடலின் மிக முக்கிய செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறதி. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
இதய தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான LDL - என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான HDL - ஐ அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தும்.
அல்சைமர் நோயை தடுக்கும் :
மனம் பிறழ்ந்து அல்லது ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வயதான பின் வர விடாமல் தடுக்கும் பண்புகளைக் கொண்டது இந்த க்ரீன் ஆப்பிள்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல் :
நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும். ஆரோக்கியமாக திகழ்வீர்கள். அதுபோல் கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றிலுள்ள என்சைம்களை நன்றாக தூண்டுகிறது.
குழந்தைகளுக்கு பீஸா, சிப்ஸ் போன்ற கொழுப்பு அதிகமான உணவுகளை தராமல் ஆப்பிளை சாப்பிட வலியுறுத்துங்கள். அவர்கள் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications





