உடலில் அதிக கொழுப்பு இருந்தால் இதை இழக்க வேண்டியதிருக்கும் என்பது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

உடலில் கொழுப்பு முக்கியம்தான். ஹார்மோன் மற்றும் பல சுரப்பிகள் செயல்படவும், உறுப்புகள் மற்றும் செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கொழுப்பு அவசியம். ஆனால் அது அளவுக்கு அதிகமாகும்போது, நமக்கு நஞ்சாக அது மாறுகிறது.

High cholesterol may cause bone loss

உடலில் தங்கும் அதிக கொழுப்பினால் உடல் பருமன், சர்க்கரை வியாதி, இதய நோய் ஆகியவை வருவதற்கான அதிக வாய்ப்புகளிருக்கிறது நீங்கள் அறிந்த விஷயம்தான். அதோடு ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு :

புதிய ஆய்வு :

ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் உடலில் அதிக சேரும் கொலஸ்ட்ராலால் உண்டாகும் பிரச்சனைகளை ஆய்வ் செய்தனர்.

கொழுப்பினால் மற்ற வியாதிகளை விட எலும்பை இழக்க வேண்டிய ஆபத்து அதிகம் என தெரிய வந்துள்ளது.

இணைப்பு திசுவில் பாதிப்பு :

இணைப்பு திசுவில் பாதிப்பு :

எலும்புகளை இணைக்கும் பகுதிகள் எலும்பு உராய்வை தடுப்பதற்காக இயற்கை நமது உடலில் அமைத்திருப்பதுதான் குஷன் போன்ற இணைப்புத் திசு பகுதி.

அந்த பகுதிகளிலுள்ள செல்களை சிதைவுக்குள்ளாக்குகிறது அதிக கொலஸ்ட்ரால். இதனால் விரைவில் செல் இரப்பு விகிதம் அதிகமாகிறது.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் :

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் :

இதன் விளைவாக எலும்புகள் தேய்மானம் அதிகமாகி ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்னும் நோய் உண்டாகிறது.

அதாவது நீங்கள் என்னதான் கால்சியம் அதிக சாப்பிட்டாலும், இனைப்பு திசு பாதிக்கப்படும்போது கால்சியம் எலும்பில் சேர்வதில்லை. இதனால் இந்த நோய் உண்டாகிறது.

சோதனை எலிகள் :

சோதனை எலிகள் :

இந்த ஆய்விற்காக க்யின்ஸ்லேண்ட் பல்கலைக் கழக தலைமை ஆய்வாளர் இந்திரா ப்ரசாதம் மற்றும் அவர் குழுவினர் இரு எலிகளைக் கொண்டு பரிசோதனை செய்தனர்.

கொழுப்பு உணவுகள் :

கொழுப்பு உணவுகள் :

ஒரு எலிக்கு அதிக கொழுப்பு உணவுகளும், மற்றொரு எலிக்கு தரமான டயட்டும் தரப்பட்டது. இதில் அதிக கொழுப்புகளை உண்ட எலிக்கு எலும்பு உற்பத்தி குறைந்து எலும்பு பாதிக்கப்பட்டது. மற்றொரு எலிக்கு எந்தவித பாதிப்புமில்லை.

ஆய்வின் முடிவு :

ஆய்வின் முடிவு :

பின்னர் இணைப்புதிசுவில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் கொழுப்புகளை குறைக்கும் மருந்துகளையும் அளித்தனர்.

இதன்பின்னர் கொழுப்பு குறைந்து இணைப்பு திசு பலம்பெற்று ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் குணமானது என ஆய்வில் தெரிவித்தனர். இதன் பற்றிய விரிவான ஆய்வு FASEB இதழில் வெளிவந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

High cholesterol may cause bone loss

Higher intake of cholesterol may cause bone loss leads to Osteoarthritis. A new research, conducted by Queensland university revealed.
Story first published: Wednesday, October 19, 2016, 9:00 [IST]
Subscribe Newsletter