இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சா இனிமேல் நீங்க கெட்சப் தொடவே மாட்டீங்க...

Posted By:
Subscribe to Boldsky

நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சிப்ஸ், பர்கர், பிட்சா மற்றும் இதர துரித உணவுகள் என அனைத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சைடிஷ் கெட்சப். இதன் சுவைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால், உண்மையில் இதன் தயாரிப்பில் என்னென்ன சேர்க்கப்படுகின்றன என தெரிந்தால் பழைய கெட்சப் பாட்டிலை கூட நீங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள்.

பொதுவாக கெட்சப் பாட்டிலில் மூலப்பொருட்கள் என்ற பட்டியலில் தக்காளி, சர்க்கரை, உப்பி, வெங்காயம், பூண்டு, பதப்படுத்தப்படும் பொருட்கள், மசாலா பொருட்கள் கலரிங் ஏஜென்ட் என்று தான் போட்டிருப்பார்கள்.

இதில் கலரிங் ஏஜென்ட், பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருட்கள் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு உலைவைக்கும் எமன்கள். இதுமட்டுமல்ல இன்னும் சில இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளிக்கு மாற்று...

தக்காளிக்கு மாற்று...

சில கெட்சப் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக லாப நோக்கத்தில் தக்காளிக்கு பதிலாக பப்பாளி விதைகள் மற்றும் முலாம்பழம் சேர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் சாதா கெட்சப் அனைத்துமே இப்படி தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இவற்றில் அளவுக்கு அதிகமாக கலரிங் ஏஜென்ட் சேர்க்கப்படுகிறது.

கலரிங் ஏஜென்ட்!

கலரிங் ஏஜென்ட்!

கெட்சப் தயாரிப்பில் தரம் மற்றும் சுகாரத்தம், அதை பாட்டிலில் அடைப்பது வரை சரியாக பார்க்கப்படுவதில்லை. முக்கியமாக இதில் சேர்க்கப்படும் கலரிங் ஏஜென்ட் நாள்பட அலர்ஜி உண்டாக முக்கிய காரணியாக இருக்கிறது.

செயற்கை இனிப்பூட்டி!

செயற்கை இனிப்பூட்டி!

கெட்சப்பில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மூலப்பொருளாகும்.

இதன் காரணத்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஒரு ஸ்பூன் கெட்சப் மூலம் 30 கலோரிகள் சர்க்கரை மூலம் மட்டுமே உடலில் சேர்கிறது.

சத்துக்கள் ஏதுமில்லை!

சத்துக்கள் ஏதுமில்லை!

தக்காளியில் இருந்து கிடைக்கும் முக்கிய சத்தே வைட்டமின் மற்றும் நார்ச்சத்து தான். ஆனால், கெட்சப் தயாரிப்பின் போதும், பிராசஸிங் செய்யப்படும் போது இவை இரண்டுமே பாதிக்கப்படுவதால், நீங்கள் வெறும் கலோரிகளாக மட்டுமே கெட்சப்பை உட்கொள்கிறீர்கள்.

யாரெல்லாம் கெட்சப் பயன்படுத்த கூடாது?

யாரெல்லாம் கெட்சப் பயன்படுத்த கூடாது?

உடல் பருமன், அலர்ஜி, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கெட்சப்பை பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு!

குறிப்பு!

என்றேனும் பார்ட்டி, ஹோட்டல் என்றால் கெட்சப் பயன்படுத்துவது தவறல்ல, இதனால் பெரிதாக எந்த தாக்கமும் உண்டாகாது. ஆனால், தினமும் வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.

இதற்கு பதிலாக, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவற்றை வீட்டிலே தயாரித்து பயன்படுத்துங்கள். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here's the Truth behind Ketchup

Does tomato ketchup contain all the goodness of tomatoes? The answer is NO.
Subscribe Newsletter