Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
வாரம் இருமுறை வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!
விலங்குகளில் பசுவும், மரங்களில் வாழையும் தான் மனிதர்களுக்கு நூறு சதவீதம் பயனளிக்கிறது. இவை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். மருத்துவ குணம் நிறைந்த உணவுகளில் வாழைத்தண்டு மிக சிறந்த உணவாகும்.
ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள்!!
சிறுநீரக கற்களை நீக்கவும், உடல் எடை அதிகரிக்க காரணியாக இருக்கும் கொழுப்பை கரைக்கவும் பெருமளவு உதவுகிறது வாழைத்தண்டு. இதை, பொரியலாகவும், சாறாகவும் எப்படி வேண்டுமானாலும் உண்ணலாம். இனி, வாழைத்தண்டு மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்...
இரவு இந்த உணவுகளை பாலில் கலந்து குடித்து வந்தால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்!!

கல்லடைப்பு
வாழைத்தண்டை இடித்து, சாறுப் பிழிந்து, அதனுடன் முள்ளங்கி சாறு அரை பங்கு சேர்த்து காலை, மாலை இரு வேளையும் நூறு மில்லி அளவு குடித்து வந்தால் கல்லடைப்பு சரியாகும்.

நீர்க்கட்டி
நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

வெப்பம் குறையும்
வெப்பம் அதிகமாக காணப்படும் காலங்களில் உணவில் வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வதால், உடல் வெப்பத்தை குறைக்க முடியும். குறிப்பாக வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்துவிடுங்கள்

சிறுநீரக கற்கள்
ஒருநாள் வாழைத்தண்டு சாறு, ஒருநாள் பார்லி காஞ்சி என மாற்றி, மாற்றி சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை எளிதாக கரைக்க முடியும். மேலும், இது உடலில் உள்ள நச்சுக்களை போக்கவல்லது.

கொழுப்பை கரைக்கும்
வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து வாழைத்தண்டு சூப் 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்புக் குறையும். மேலும் இது நீரிழிவுக்கு சிறந்த மருந்தாகும்.

மாதவிடாய்
நாட்கள் தள்ளி போதல், அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள், வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல விரைவாக தீர்வு காண முடியும்.

வறட்டு இருமல்
இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.

மஞ்சள் காமாலை
வாழைத்தண்டை காயவைத்து பொடியாக்கி, தேன் கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையில் இருந்து சீக்கிரமாக குணமடையலாம்.

வயதானவர்கள் எச்சரிக்கை
இது சிறுநீர் அதிகரிக்க செய்யும் என்பதால் வயதானவர்கள் குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications