தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

தயிரை பிடிக்காதவர்கள் மிகக் குறைவு. கடும்பசிக்கு கூட வெறும் தயிர் சாதமும், ஊறுகாயும் இருந்தாலே போதுமானது. வயிறு நிறைந்துபோல் உணர்வு தோன்றும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு தயிர் சாதமாகத்தான் இருக்கும். ருசிக்கு குறைந்தது அல்ல அதன் சத்துக்கள்.

ஜீரணத்திற்கு அதிகப்படுத்தும். அதிக அளவு கால்சியம் கொண்டுள்ளது. எலும்பு பலத்திற்கு நல்லது. அதோடு ஒரு புதிய ஆராய்ச்சியில் தயிரை சாப்பிடுவதால், மார்பக புற்று நோய் வராது என கண்டுபிடித்துள்ளனர்.

தயிரினை நாம் தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பக புற்று நோயை தடுக்கலாம் :

மார்பக புற்று நோயை தடுக்கலாம் :

என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி இதழில் வெளியிட்டுள்ள ஆய்வில், தயிரில் இருக்கும் நல்ல பேக்டீரியாக்கள், மார்பகங்களில் உள்ள டி.என் ஏவை தாக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கின்றது. இதனால் மார்பக புற்று நோய் வராமல் காக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதயத்தை பலப்படுத்தும் :

இதயத்தை பலப்படுத்தும் :

சிலருக்கு பால் அலர்ஜியாக இருக்கும். அவர்கள் தயிரை சாப்பிடலாம். தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது.

நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் :

நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் :

தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.

உடல் எடையை குறைக்கலாம் :

உடல் எடையை குறைக்கலாம் :

நமது உடலில் சுரக்கும் கார்டிசால் என்ற ஹார்மோன் சம நிலை இல்லையென்றால், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொழுப்பு ஆகிய பாதிப்புகள் உண்டாகும். தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும்.

மன அழுத்தத்தை குறைக்கும் :

மன அழுத்தத்தை குறைக்கும் :

தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of consuming curd everyday

Health benefits of consuming curd everyday
Story first published: Tuesday, June 28, 2016, 13:10 [IST]