For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோய்களுக்கு ஜீன் மட்டுமா காரணம்?

|

பெரும்பாலான முதன்மையான நோய்களுக்கு நம்முடைய பரம்பரை ஜீன்களே காரணம் என சொல்லிவந்தனர். ஆனால் நம்முடைய பழக்க வழங்களும், சுற்றுப்புற சூழ் நிலையும் நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது.

சுற்றுப்புற காரணிகளான, நாம் சாப்பிடும் உணவுகள், வாழ்க்கை முறை இவைகளும் நோய்களை உண்டாக்குகின்றன என்று புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

Gens not only cause for diseases, also lifestyle

யு.கேவில் வெளிவரும் ஜர்னல் நேச்சுர் ஜெனிடிக்ஸ் என இதழில் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது. கடந்த 2006-2010 வரை, 40- 69 வயது வரை உள்ள சுமார் 5 லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு பல்வெறு நோய்கள் மற்றும் வருவதற்கான காரணங்கள் மற்றும் எவ்வாறு தடுக்கலாம் என்பதன்பொருட்டு செய்யப்பட்டது.

இதில் ஜீன்களால் வரும் நோய்கள் எவையென் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது என பிரிட்டனிலுள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் க்ரிஸ் ஹலே கூரியுள்ளார்.

இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை மரபு ரீதியாக வருவது இல்லை. மாறாக பழக்க வழக்கங்களால் வருவதுண்டு என்று புதிய ஆய்வு கூறுகின்றது.

அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளான, பர்கின்ஸன்ச் வியாதி, ஸ்ட்ரோக், மன நலம் குன்றுதல் ஆகியவைகளும் சுற்றுபுறம் மற்றும் பழக்க வழக்கம்ம் சார்ந்ததே. மரபு மட்டும் காரணமில்லை.

முந்தைய நிறைய ஆய்வுகளில் ஜீன்களே பல்வேறு நோய்களுக்கு காரணம் என்று சொல்லி வந்தோம். ஆனால் அது ஆராய்ச்சியின் ஒருபகுதியே. இன்னும் ஆழ்ந்து கண்டுபிடித்தால் நிறைய நோய்களுக்கு காரணங்கள் தெரிய வரும்.

இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் பற்றி இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன

English summary

Gens not only cause for diseases, also lifestyle

Gens not only cause for diseases, also lifestyle
Story first published: Saturday, July 23, 2016, 11:24 [IST]
Desktop Bottom Promotion