Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
மூளைக் கோளாறுகளைத் தடுக்க உதவும் சிறந்த உணவுகள்!!!
எண் சாண் உடம்பில் தலையே பிரதானம். அந்த தலையில் உள்ள மிக முக்கியமான உறுப்பு மூளை ஆகும். மூளை உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றது. மூளை முறையாக செயல்படவில்லை எனில், மற்ற உறுப்புகள் சரிவர இயங்காது. மூளை இறந்து விட்டால், பிற உறுப்புகள் செயல்பட்டாலும், இந்த உடல் இயங்காது. எனவே மூளை சரியாக செயல்பட சரிவிகித உணவு தேவைப்படுகின்றது.
சரிவிகித மற்றும் சத்தான உணவுகள் மூளைக்குத் தேவைப்படும் அனைத்து விதமான சத்துக்களையும் தந்து, டிமென்ஷியா, பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. இதன் காரணமாக மூளை வலுவடைந்து நம்முடைய அறிவாற்றலும் மேம்படுகின்றது.
நம்முடைய மனநிலை, கற்றுக் கொள்ளும் செயல்திறன் மற்றும் நினைவாற்றல் போன்றவை, நாம் உட்கொள்ளும் உணவுகளால் பாதிக்கப்படுகின்றது. எனவே, நமது மூளையின் செயல்திறன் மற்றும் சுகாதாரத்தை அதிகரிக்க, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகின்றது.
எனவே, இந்த கட்டுரையில், தமிழ் போல்ட்ஸ்கை, நம் மூளைக்கு மிகவும் உகந்த சில சிறந்த உணவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நமது உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகின்றது. கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள், மூளையில் புரதக் கட்டமைப்பு உருவாவதைக் குறைக்கிறது. அதன் காரணமாக டிமென்ஷியா நோயின் அபாயமும் நமக்கு குறைகின்றது. பாலிஃபீனால்கள் நினைவாற்றல் மற்றும் மூளையின் இணைப்புகளை அதிகரிக்கின்றது.

கீரை
கீரையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், அது மூளைக்கு உகந்த சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பொட்டாசியம் மூளையின் மின்னணு கடத்தும் ஆற்றலை பராமரிக்க உதவுகிறது. மேலும் அது மூளையின் செல்கள் சேதம் அடைவதைத் தடுப்பதுடன் டிமென்ஷியா நோயின் ஆபத்தையும் குறைக்கிறது.

ஆப்பிள்
ஆப்பிளில் ஃப்ளேவோனாய்டு என்கிற ஒரு நறுமணப் பொருள் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக பயன்படுகின்றது. இது பார்கின்சன், மற்றும் அல்சைமர் நோய் போன்ற நரம்புமண்டல நோய்களுக்கு எதிராக மூளையைப் பாதுகாக்கிறது. ஆப்பிள், நரம்பு செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும் இது, நுரையீரல், மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது.

அவகோடா
அவகோடாவில் உள்ள கனிமங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை ஊக்குவிக்கின்றது. அதோடு இல்லாமல், அவகோடாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள கழிவுகளால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற விஷத்தன்மை அழுத்தம் மற்றும் செல்களில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றையும் தடுக்கின்றது.

மஞ்சள்
மஞ்சளில் காணப்படும் குர்குமின், ஒரு இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இதனுடைய வீக்கத்தைக் குறைக்கும் பண்பானது, மூளையில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தி புலனுணர்வு பலவீனத்தை சரிகட்ட உதவுகின்றது.



Click it and Unblock the Notifications
