Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
புகைத்து, புகைத்து பொசுங்கிப் போன நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்!
நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள உலக சூழலில் புகைப் பழக்கத்தைவிட சுற்றுசூழல் மாசின் காரணமாக தான் நிறைய நுரையீரல் பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுகிறது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நமது நாட்டில் டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இந்த மாசு அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு தீர்வுக் காண சில உணவுகளை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது....

பூண்டு
பூண்டில் நிறைய நச்சுக்களை போக்கும் மூலப்பொருட்கள் இருக்கின்றன. மேலும், இதிலிருக்கும் அல்லிசின் (allicin) நச்சுக்களை அழிக்கவும், எதிர்த்து போராடவும் உதவுகிறது. பூண்டு ஆஸ்துமா பிரச்சனை குறையவும், நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் வலுவளிக்கிறது.

இஞ்சி
இஞ்சியிலும் நச்சுக்கொல்லி மூலப்பொருட்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவாசக் குழாயில் தேங்கும் நச்சுக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது.

மஞ்சள்
பூண்டு, இஞ்சியை போலவே மஞ்சளிலும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் மூலப்பொருட்களும், நச்சுக்களை அழிக்கும் தன்மையும் நிறைய இருக்கிறது.

ஆப்பிள்
ஆப்பிள்-ல் நிறைய வகை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயனளிக்கிறது.

பெர்ரி உணவுகள்
ப்ளாக் பெர்ரி, ப்ளூ பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி உணவுகளில் ஆண்டி-ஆக்ஸிசிடன்ட்ஸ் இருக்கின்றன. இவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சார்ந்த தொற்று அல்லது நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

திராட்சைப்பழம்
திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம். ஒருவேளை உங்கள் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகும் காரணிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீண்டு வர, சுத்தம் செய்ய திராட்சைப்பழம் உதவுகிறது.

மாதுளை
மாதுளையில் நிறைய நல்ல மூலப்பொருட்கள் இருக்கின்றன. இது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளின் வளர்ச்சியை தடுக்கும் குணமுள்ளது.

நட்ஸ் மற்றும் பீன்ஸ்
இந்த உணவுகளில் அதிகளவில் மெக்னீசியம் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை இருக்கும் நபர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு. மேலும், இது நுரையீரலின் திறனை அதிகரிக்க செய்து, செயல்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

பிஸ்தா
பிஸ்தாவை அப்படியே சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் கூட பிஸ்தா பயனளிக்கிறது.

சிவப்பு மிளகாய்
வரமிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தொண்டை புண், இருமல் சரியாகவும், சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் உதவுகிறது. மேலும் மூச்சுக்குழாய் நெரிசலுக்கும் கூட இது நல்ல தீர்வளிக்கிறது.

வெங்காயம்
வைட்டமின் பி6, சி, ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் வெங்காயம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். இது நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புடைய உணவாகும்.

தண்ணீர்
சோடா பானம், மது அல்லது பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதற்கு பதிலாக நீங்கள் வெறும் நீரை பருகுவது நல்லது. இது, நுரையீரல் மட்டுமின்றி, உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கும் திறன் கொண்டது ஆகும்.



Click it and Unblock the Notifications