Latest Updates
-
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
வெள்ளை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!
எல்லா உணவுகளுக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு தன்மை இருக்கும். ஒவ்வொரு உணவிலும் ஏதேனும் ஒரு சத்து அதிகமாக இருக்கும். அது புரதமாக, வைட்டமினாக, நார்ச்சத்தாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனால் தான் நமது உணவு முறையில் பிடிக்கும், பிடிக்காது என பாராமல் அணைத்து காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள்.
இறைச்சிக்கு இணையான புரத சத்துக்கள் இருக்கும் சைவ காய்கறி உணவுகள்!!
ஒருசில காய்கறிகள் கண்ணுக்கு நல்லதாக இருக்கும், சிலவன இதயம், கல்லீரல், செரிமானம் என கண்டிப்பாக ஏதேனும் ஓர் உடல் பாகதிற்குக் சிறந்த உணவாக இருக்கும். இந்த வகையில் வெள்ளை காய்கறி உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன, அவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என இனிக் காண்போம்...
தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள்!!!

காலிஃபிளவர்
கல்லேரலில் இருக்கும் நச்சுக்களை போக்க உதவும் உணவுகளில் காலிஃபிளவர் ஓர் சிறந்த உணவாகும். காலிஃபிளவர் மற்றும் ப்ரோகோலி இரண்டுமே புரோஸ்டேட்புற்றுநோய் அபாயத்தை குறைக்கவல்ல காய்கறிகள்.

காலிஃபிளவர்
கடந்த 2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது. காலிஃபிளவரை ஆலிவ் ஆயிலில் சமைத்து உண்பது உடலுக்கே மேலும் வலு சேர்க்கிறது என கூறப்படுகிறது.

வெங்காயம்
நோய் எதிர்ப்பை அதிகரிக்க, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, இதய நலனை அதிகரிக்க, நச்சுக்களை போக்க என பல வகைகளில் உடலுக்கு நன்மை விளைவிக்கிறது வெங்காயம்.

வெங்காயம்
பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும், மேல் தோல் மட்டும் நீக்குவது போதுமானது, சிலர் வெங்காயத்தை அரைவாசி வரையிலும் உரித்து எடுத்துவிடுவார்கள். இதை தவிர்க்கவும்.

தேங்காய் பால், எண்ணெய்
வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணை குணப்படுத்த தேங்காய் பால் மற்றும் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்தல் சிறந்தது.

தேங்காய் பால், எண்ணெய்
மேலும் சமீபத்திய ஆராய்ச்சியில் தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்கவும் பயனளிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது கொலஸ்ட்ரால் குறைத்து இதய நலனை மேம்படுத்த உதவுகிறது.

பூண்டு
பூண்டு ஓர் மருத்துவ குணம் வாய்ந்த உணவு. உணவு என்பதை விட பூண்டு மருந்து என்பது தான் சிறந்தது. இது, கொலஸ்ட்ரால் குறைக்க, நச்சுக்களை போக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க, இதய நலனை காக்க என பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. பூண்டில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மிகவும் சக்தி வாய்ந்தது.

டர்னிப்
டர்னிப்பில் நார்ச்சத்து அதிகம். இதை சூப், சாம்பார், பொரியல் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். இது ஒருவகையான கிழங்கு வகை காய்கறி ஆகும். நார்ச்சத்து உள்ளதால் இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
