உங்களுக்கு உணவு அலர்ஜியா? இதை செய்யுங்க!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சிலருக்கு பிறக்கும்போதே, கோதுமை, பால், தயிர் , முட்டை, புரோட்டின் உணவுகள் மற்றும் சில வகை காய்கள் அலர்ஜியை தரும். உடல் முழுவதும், வீக்கம், அரிப்பு அல்லது வாந்தி, ஆகியவை உண்டாகும். இதற்கு குடல் செயல்பாட்டில் உண்டாகும் குறைபாடே காரணம். அதேபோல் விட்டமின் ஏ குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் இவ்வாறான அலர்ஜி ஏற்படும்.

Fibre rich food can prevent food allergy

நார்சத்து நிறைந்த உணவுகள் :

தினமும் காலையில் ஓட்ஸ் , ஆப்ரிகாட் போன்ற நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உணவு அலர்ஜியை தடுக்கலாம்.

Fibre rich food can prevent food allergy

ஒரு ஆய்வில் எலிகளுக்கு கடலைக்காய் அலர்ஜி என்று தெரியவந்தது. அவைகளுக்கு தொடர்ந்து நார்சத்து உணவுகளை தந்தவுடன் அலர்ஜி குறைந்து, அவைகளுக்கு பரிப்பூரணமாக கடலைக்காயை எடுத்துக் கொள்ள முடிந்தது.

Fibre rich food can prevent food allergy

நார்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, குடல் மற்றும் இரைப்பைகளின் செயல்களை மாற்றி, நல்ல பேக்டீரியாக்களின் உற்பத்தியை தூண்டுகிறது.

லாக்டோ பேஸிலஸ் போன்ற நல்ல பேக்டீரியாக்களுக்கும் , நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுகிறது. இவை உண்டவினால் உண்டாகும் அலர்ஜியை முழுவதும் தடுக்கின்றன.

Fibre rich food can prevent food allergy

இதனால் வாழ் நாள் முழுவதும் சில உணவுவகை உண்ண முடியாமல் தவிப்பவர்களுக்கு வரபிராசதமாக இது அமையும் என்று ஆஸ்திரேலியாவிலுள்ள மோனாஷ் பல்கலைக் கழகத்திலுள்ள பேராசிரியர்ஜியான் டேன் என்பவர் கூறுகிறார்.

நார்சத்து கொண்ட உணவுகளில் சிறிய சங்கிலி கொண்ட கொழுப்பு அமிலங்கள் டென்ட்ரைடிக் செல்களை தூண்டுகின்றன. அவைதான் அலர்ஜியை உண்டாக்கும் செல்களை கட்டுப்படுத்துபவை.

இந்த ஆய்வைப் பற்றி விரிவாக செல் ரிப்போர்ட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

English summary

Fibre rich food can prevent food allergy

Fibre rich food can prevent food allergy
Subscribe Newsletter