For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் தடை செய்யப்பட்ட 8 பீர் வகைகள்!

|

"நான் குடிக்க எல்லாம் மாட்டேன் பீர் மட்டும் தான்... அதுவும் எப்போவாவது தான்... " என சோசியலாக கூறும் நபர்கள் உங்கள் வட்டாரத்திலும் இருக்கலாம். ஏன், நீங்களாகவே கூட இருக்கலாம். பீர் குடிப்பது எல்லாம் சகஜம், பெரிய தவறில்லை என கூறும் சமூகமாக நாம் மாறிவிட்டோம்.

ஆனால், சில பீர்களில் உடல் ஆரோக்கியத்திற்கு அபாயம் விளைவிக்கும் மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

முக்கியமாக, மரபணு மாற்றப்பட்ட கார்ன் சிரப், மரபணு மாற்றப்பட்ட கார்ன், உயர் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப், மீன் சிறுநீர்ப்பை, புரோப்பிலீனில் கிளைகோல், மோனோ சோடியம் குளுக்கோனேட், ஃப்ளேவர், மரபணு மாற்றப்பட்ட சர்க்கரை, காரமல் கலரிங், பூச்சிகள் சார்புடைய டைகள் மற்றும் பி.பி.எ (BPA) கலப்பு.

இதையும் படிங்க: பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

மேற்கூறப்பட்டுள்ள மூலப் பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தும் கூட சில வகை பீர்களில் கலக்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்தை சீரழிக்கும் குணம் கொண்டவை ஆகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூகேஸில் பிரவுன்

நியூகேஸில் பிரவுன்

நியூ காஸ்டல் அலே எனும் இந்த பீரில் காரமல் கலரிங் சேர்க்கப்படுகிறது. இது புற்றுநோய் கட்டிகள் / செல்கள் உண்டாக காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்வைஸர்

பட்வைஸர்

இந்த பீரில் மரபணு மாற்றப்பட்ட கார்ன் சேர்க்கப்படுவதாகவும். இது ஆரோக்கியத்திற்கு அபாயமானது என்றும் கடந்த 2007-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மைக்கலோப் அல்ட்ரா

மைக்கலோப் அல்ட்ரா

மைக்கலோப் அல்ட்ரா எனும் இந்த பீரில் மரபணு (GMO) மாற்றப்பட்ட இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகிறது. இது, அபாயகரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன்

பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன்

பிரபலமான இந்த பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன் பீரில், அபாயகரமான மரபணு மாற்றப்பட்ட கார்ன் மற்றும் கார்ன் சிரப் இதில் சேர்க்கப்படுகின்றன.

மில்லர் லைட்

மில்லர் லைட்

மில்லர் நைட் பீரில் மரபணு மாற்றப்பட்ட கார்ன் மற்றும் கார்ன் சிரப் சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்தை சீரழிக்கும் தாக்கம் கொண்டவை ஆகும்.

கின்னஸ் பீர்

கின்னஸ் பீர்

கின்னஸ் பிராண்டின் சில பீரிகளில் மீன் சிறுநீர்ப்பை கலப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் ஃபிரக்டோஸ் சிரப்பும் சேர்க்கப்படுகிறது.

இவை இரண்டும் திட மற்றும் நீர் உணவுகளில் சேர்க்கக் கூடாது என தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் கின்னஸ் பீர் நிறுவனம், ஃபிரக்டோஸ் கார்ன் சிரப் சேர்க்கப்படுவதில்லை என இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

கூர்ஸ் லைட்

கூர்ஸ் லைட்

இந்த பிராண்ட் பீர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதிலும் மரபணு மாற்றப்பட்ட கார்ன் சிரப் சேர்க்கப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

கொரோனா எக்ஸ்ட்ரா

கொரோனா எக்ஸ்ட்ரா

இதிலும், மரபணு மாற்றப்பட்ட கார்ன் சிரப் மற்றும் புரோப்பிலீனில் கிளைகோல் போன்ற உடல் நலத்திற்கு அபாயமான மூலப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

எனவே, அடுத்த முறை பீர் குடிக்கும் போது, அவற்றில் இந்த கலப்புகள் இருக்கிறதா, இல்லையா என பரிசோதித்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Beers That You Should Stop Drinking Immediately

Eight Beers That You Should Stop Drinking Immediately, take a look on here.
Desktop Bottom Promotion