Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
30 நாட்கள் தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து உண்டு வந்தால் பெறும் நன்மைகள்!
நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் பலவன நமது உடலை அன்றாடம் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. இதில் இஞ்சி, மஞ்சள், மிளகு போன்ற சிலவன பண்டையக் காலம் முதலே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள்!!!
இஞ்சி, மிளகு, மஞ்சள் இந்த மூன்றுமே அருமருந்து என கூறலாம். அதிலும் இஞ்சி உடலில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் தன்மை கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், இதய நலன், நீரிழிவு, இரத்த சர்க்கரை அளவு, செரிமானம், மூளையின் செயற்திறன் என தலை முதல் கால் வரை அனைத்து உடல் பாகங்களுக்கும் பலனளிக்கிறது இஞ்சி.
உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!
இந்த அருபெருமை கொண்ட இஞ்சியை ஒரு மாத காலம் தொடர்ந்து அன்றாட உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் உண்டாகும் ஆரோக்கிய மாற்றங்கள் குறித்து இனிக் காணலாம்....

செரிமானம்
செரிமானம் மற்றும் வாயுக் குழாய் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணமாக திகழ்கிறது இஞ்சி. 30 நாட்கள் தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து உண்டு வருவதால் உங்கள் உடலில் உள்ள ஜி.ஐ குழாய் சீராக நலன் பெற்று புத்துணர்ச்சி அடையும். வெறும் 1.2 கிராம் அளவு இஞ்சியை ஒரு மாத காலம் உட்கொண்டு வந்தாலே 50% செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண முடியும்.

குமட்டல்
குமட்டல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சியை அப்படியே சாப்பிடுவது குமட்டலை தடுக்கும். மேலும், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உண்டாகும் காலை நேர உடல் சோர்வு அல்லது உடல்நலம் குன்றுதல் போன்றவற்றை சரி செய்ய தினமும் 1.5 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து வந்தாலே போதுமானது.

வலிநிவாரணி
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அன்றாட உணவில் இஞ்சியை சிறிதளவு சேர்த்துக் உட்கொள்வது தசை வலிகளை 25% அளவு குறைக்க செய்கிறது என கண்டறியப்பட்டது. மேலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியை குறைக்கவும் கூட இஞ்சி பயனளிக்கிறது.

அழற்சி
மூட்டு பகுதிகளில் அழற்சி, மூட்டு சார்ந்த உடல்நலக் குறைபாடுகள், மூட்டு வலி போன்றவற்றில் இருந்து வெளிவர, சிறந்த நிவாரணம் பெற இஞ்சி சிறந்த மூலப்பொருள் ஆகும்.

இதய நலன்
இதய நோய் அபாயத்தை குறைப்பதில் இஞ்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை வெகுவாக குறைக்க முடியும். மேலும், இது 10% வரை இதய நோய்கள் உண்டாகும் அபாயத்தையும் குறைக்கிறது.

கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் 45 நாட்கள் அன்றாட உணவு முறையில் 3 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து உண்டு வந்தால் கொலஸ்ட்ராலை கணிசமான அளவு குறைக்க முடியும். மேலும், கொலஸ்ட்ரால் காரணமாக அதிகரிக்கும் இதய கோளாறுகளையும் இது குறைக்க பயனளிக்கிறது.

புற்றுநோய்
இஞ்சியில் இருக்கும் 6- Gingerol எனும் மூலப்பொருள் புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகும். தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்கும்.

மூளை செயல்திறன்
ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் நாள்பட்ட அழற்சி போன்ற இரண்டு காரணங்களால் உண்டாகும் மூளை செயற்திறன் குறைபாட்டை சரிசெய்ய இஞ்சி உதவுகிறது. மேலும், இஞ்சியில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மூளையின் செயற்திறனை ஊக்குவிக்கிறது. இப்படி மூளையின் ஆரோக்கியத்தை பலவகையில் ஊக்குவிக்கிறது இஞ்சி.



Click it and Unblock the Notifications
