Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
காபி பிரியரா நீங்க? ஒரு நாளைக்கி எத்தன தடவ குடிப்பிங்க? வாங்க இதப்படிச்சுட்டு போய் குடிங்க!
1990 வரை நாம் அறிந்தது எல்லாம் ஸ்ட்ராங்கா ஒரு காபி, லைட்டா ஒரு காப்பி, சக்கரை தூக்கலா ஒரு காபி போன்ற வகைகள் தான். ஆனால், இப்போது சி.சி.டி-க்குள் நுழைந்தால் ரகரகமாக பல வகை காபி அடங்கிய ஓர் பட்டியல் கண் முன்னே நீட்டப்படும். அவ்வளவு காபி வகைகள் உலகில் இருக்கின்றன.
காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
இத்தாலி ஸ்பெஷல் தனி வகை. சமீப காலமாக காபி அதிகம் குடிக்க வேண்டாம் என பல ஆய்வு முடிவுகள் வெளிவந்ததை நாம் கண்டிருப்போம். ஆனால், சமீபத்தில் காபி குடியுங்கள் நல்லது என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதைப் பற்றி இனிக் காண்போம்...

மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்
NAFLD (Non-alcoholic fatty liver disease) என்பது மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் ஆகும். 70வது கிலோ எடை உள்ள நபர் ஒரு நாளுக்கு 4-6 தடவை காபி குடிப்பது அவருக்கு இந்த மது அல்லாத கல்லீரல் கொழுப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது என சமீபத்திய ஆராய்ச்சி தகவலில் கூறப்பட்டுள்ளது.

சொனுளின் (Zonulin)
ஆராய்ச்சியாளர்கள், மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து காக்க காப்பி உதவுகிறது என கூறியுள்ளனர். காபி குடிப்பதால் Zonulin எனும் புரதத்தின் அளவு உடலில் அதிகரிக்கிறது இது குடலின் ஊடுருவும் தன்மையை ஊக்குவிக்கிறது. இதனால், கல்லீரலில் உண்டாகும் மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து தீர்வு பெற முடியும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நாப்போலி பல்கலைக்கழகம்
இத்தாலியில் உள்ள நாப்போலி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் வின்சென்சோ (Vincenzo Lembo) என்பவர் தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். காபி NAFLD (Non-alcoholic fatty liver disease) செல்களில் எதிர்மறை தாக்கம் உண்டாக்கி பிரச்சனையை சரி செய்கிறது என இவர் கூறியுள்ளார்.

இத்தாலி
இத்தாலி காபிக்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். காபி குடிப்பது கல்லீரலில் உண்டாகும் மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயை தடுக்கிறது எனிலும், அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை
இந்த ஆய்வறிக்கை பார்சிலோனா, ஸ்பெயின்-ல் நடந்த சர்வதேச கல்லீரல் காங்கிரஸ் TM 2016 கருத்தரங்கில் முன்னிலைப்படுத்தி கூறப்பட்டது.



Click it and Unblock the Notifications
