Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் தொண்டைப் புற்றுநோய் வருமா? ஆய்வு தகவல்!
புருக்கோலி மிகவும் அற்புதமான அதிசய உணவுவகை. இந்த கால கட்டத்தில் அவசியம் தேவைப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று. காரணம் புற்று நோய்.
எத்தனையோ மோசமான கெமிக்கல்கள் நம் உடலுக்குள் உணவு, சுற்றுபுற சூழ் நிலை மூலமாக வந்தடைகிறது. விளைவு கொடிய நோய்கள்.

இதற்காக நிறைய காய்களிலுள்ள சத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் புருக்கோலி தலை மற்றும் கழுத்தில் உண்டாகும் புற்று நோயை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
புருக்கோலியில் சல்ஃபரோஃபேன் என்ற மூலக்கூறு உள்ளது. இது சக்திவாய்ந்த கதிர்வீச்சு மற்றும் புற்று நோயை உருவாக்கக் கூடிய ரசாயனங்களை வரவிடாமல் தடுக்கிறது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூலி பௌமேன் என்ற பேராசிரியர் கூறுகிறார்.
இந்த புருக்கோலியை சாப்பிடும்போது, அவை உடலில் நச்சை வெளியேற்றச் செய்யும் ஜீனை தூண்டச் செய்கிறது. இதனால் செல்லைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் ஏற்பட்டு, சிதைவு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இயல்பான செல்கள் புற்று நோய் செல்களாக மாறாமல் இருக்கிறது.
புருக்கோலி தொடர்பான ஆய்வில் தலை மற்றும் தொண்டையில் புற்று நோய் உள்ளவர்களுக்கு அதிக சல்ஃபரோஃபேன் கொடுக்கப்பட்டு, சாதரணமாக இருப்பவர்களின் தலை மற்றும் தொண்டையின் செல்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.
அதேபோல் சோதனை எலிகளுக்கு புற்று நோயை செல்களை உட்செலுத்தி, சில எலிகளுக்கு கூடவே சல்ஃப்ரோஃபேன் மூலக்கூறுகளும் செலுத்தப்பட்டது.
ஆய்வின் இறுதியில், சல்ஃபரோஃபேன் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு புற்று நோயின் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது என கண்டறியப்பட்டது.
புருக்கோலியை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடும்போது, புற்று நோயின் தாக்கத்தை குறைத்து, வாழ் நாளை நீடிக்கச் செய்யும் என்று கூடுதல் தகவலையும் பௌமன் கூறினார்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

