Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும் உணவுகள்!
உடலின் உறுதித்தன்மை மற்றும் ஆற்றலை அதிகரிக்க உணவுகள் தான் உதவி புரியும். அதிலும் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் உதவும்.
எனவே அந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படலாம். இங்கு உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்கள் உணவில் சேர்த்து உங்கள் ஸ்டாமினாவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரையும் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் இப்பழம் கல்லீரலை சுத்தம் செய்வதோடு, உடல் எடையை பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும். முக்கியமாக இதில் உள்ள நார்ச்சத்து தான் உடலில் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது.

பாதாம்
பாதாமில் உடலுக்கு ஆற்றலை வழங்கும் வைட்டமின் ஈ மற்றம் ஒமேகா-3 ஃபேட்டிஅமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. இவற்றை உட்கொண்டு வந்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, எலும்புகள் வலிமையாகும், மூளை மற்றும் இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.

பீன்ஸ்
பீன்ஸில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் ஆற்றல் அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். மேலும் இதனை அளவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வை தருவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஃபுருக்டோஸ் போன்றவை அதிகம் உள்ளது. அதனால் தான் இதனை உட்கொண்டவுடன் உடலுக்கு ஆற்றல் கிடைத்த உணர்வு ஏற்படுகிறது. மேலும் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால், ஒருவருக்கு ஒருமுகப்படுத்தும் தன்மை அதிகரிக்கும்.

பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின்கள் உடலில் சோர்வை நீக்கி, ஸ்டாமினா அதிகரிக்க உதவும். எனவே நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க நினைத்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications
