ஏன் காலை உணவு தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்?

Written By:
Subscribe to Boldsky

காலை உணவு மிக முக்கியமான உணவு. எதை தவற விட்டாலும் காலை உணவை தவறக்கூடாது எனக் கூறுவார்கள். ஆனால் நிறைய பேர் காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைக்கலாம் என நினைக்கிறார்கள்.

Best break fast foods to weight loss,

இது முற்றிலும் தவறு. காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்குமே தவிர உடல் எடை குறையாது. இதனைப் பற்றி இஸ்ரேல் பல்கலைக் கழகம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. அதனைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

12 வார ஆராய்ச்சியில் -ஒரு பிரிவினருக்கு காலை- 700 கலோரி, மதியம் - 500 கலோரி, இரவு - 200 கலோரி உணவும் தரப்பட்டது.

மற்றொரு பிரிவிற்கு காலை - 200 கலோரி, மதியம்- 500 கலோரி, இரவு - 700 கலோரி உணவும் தரப்பட்டது.

ஆய்வு முடிவு :

ஆய்வு முடிவு :

ஆய்வின் இறுதியில் காலையில் அதிக உணவு சாப்பிட்ட பெண்களுக்கு 2. 5 மடங்கு உடல் எடை குறைந்தது. காலை உணவை குறைவாக சாப்பிட்டவர்களை விட அதிக உடல் எடை குறைந்தது.

ஆனால் காலை உணவை குறைவாக சாப்பிட்டவர்களுக்கு உடல் எடை மாறாக அதிகரித்தது.

காலையில் அதிகம் சாப்பிடுவதால் பலன் :

காலையில் அதிகம் சாப்பிடுவதால் பலன் :

காலையில் அதிகம் உணவு சாப்பிடும்போது கெட்ட கொழுப்பு கரைகிறது. இதனால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக இடுப்புப் பகுதியில் இருக்கும் கொழுப்பு குறைவதாக ஆய்வு கூறுகிறது.

ஏன் காலை குறைவாக சாப்பிட்டால் உடல் எடை கூடும் ?

ஏன் காலை குறைவாக சாப்பிட்டால் உடல் எடை கூடும் ?

காரணம் காலையில் அதிக செரிமான நொதிகள் சுரக்கும். அந்த சமயத்தில் கல்லை சாப்பிட்டாலும் ஜீரணமாகும். ஆனால் அதன் பிறகு சாப்பிடும்போது கொழுப்பு உணவுகள் சரியாக ஜீரணமாவதில்லை. அதனால்தான் உடல் எடை கூடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best break fast foods to weight loss,

Minimizing break fast may cause for weight gain,
Story first published: Saturday, December 10, 2016, 12:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter