Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்கள் விந்தணுவின் சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...
இன்றைய இளம் ஆண்கள் பெரிதும் கவலைக் கொள்ளும் ஓர் விஷயம் தான் விந்தணு குறைவாக உற்பத்தி செய்யப்படுவது. உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய அளவு விந்தணு உற்பத்தி செய்யப்படாமல், குழந்தையைப் பெற்றெடுக்க உதவ முடியாமல் கஷ்டப்படுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!!
இப்படி விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தான். குறிப்பாக இக்கால ஆண்கள் அதிகமாக வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்வதால், விந்தணு உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுவதோடு, உற்பத்தி செய்யப்படும் விந்தணுவும் தரமானதாக இருப்பதில்லை.
ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
ஆனால் இப்பிரச்சனைக்கு எப்படி உணவுகள் காரணமாக உள்ளதோடு, அதேப் போல் உணவுகளைக் கொண்டே இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இங்கு ஆண்களின் விந்தணு உற்பத்தி மற்றும் அதன் தரத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், நிச்சயம் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணலாம்.
ஆண்கள் கேரட் சாப்பிட்டால் விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படுமாம் : ஆய்வில் தகவல்!

பூண்டு
ஆண்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஏனெனல் பூண்டுகளில் அல்லிசின் என்னும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் கலவை உள்ளது. எனவே பூண்டை ஆண்கள் உட்கொள்ளும் போது, இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, விந்தணு உற்பத்தி அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் உயரும்.

வால்நட்ஸ்
மனித மூளை போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த வால்நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் நல்லது. வால்நட்ஸில் ஆண்களின் விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்கும் அர்ஜினைன் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

முட்டை
முட்டையில் இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள திசுக்கள் அழிவதைத் தடுக்கும் வைட்டமின் ஈ சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே ஆண்கள் தினமும் குறைந்தது ஒரு முட்டையை உட்கொண்டு வந்தால், இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள திசுக்கள் அழிவதைத் தடுத்து, விந்தணுவின் எண்ணிக்கையை உயர்த்தலாம்.

மாதுளை
ஆண்கள் தினமும் மாதுளை அல்லது மாதுளை மில்க் ஷேக்கை குடித்து வருவது நல்லது. இதற்கு மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், விந்தணுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் மாதுளை விந்தணுவின் தரத்தையும் அதிகரிக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் புரோமிலைன் வளமாக உள்ளது. இந்த நொதி செக்ஸ் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். மேலும் இதில் வைட்டமின் ஏ, பி1 மற்றும் சி அடங்கியுள்ளது. இந்த வைட்டமின்கள் விந்தணு உற்பத்திக்கும், உடலின் ஸ்டாமினாவை நீண்ட நேரம் தக்க வைக்கவும் உதவும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள அர்ஜினைன் என்னும் பொருள், விந்தணுவின் அளவு மற்றும் தரத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் படுக்கையில் சிறப்பாக செயல்பட நினைத்தால், டார்க் சாக்லேட்டை உட்கொண்டு வாருங்கள்.

கடல் சிப்பி
கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவையும், விந்தணுவின் உற்பத்தியையும் அதிகரிப்பதில் ஜிங்க் சத்து மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் கடல் சிப்பியை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, விந்தணுக்கள், பாலுணர்ச்சி மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
