இந்திய உணவுகளில் இருக்கும் புரதச்சத்தின் அபரிமிதமான பயன்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

புரதச்சத்து என்பது மனிதர்களின் உடல்நலனுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்றாகும். இது உடல் திறனை அதிகரிக்க வெகுவாக உதவுகிறது. இது மட்டுமின்றி, ஹார்மோன், தசை, எலும்பு, தோல், இரத்தம், குருத்தெலும்பு என உடல் வலிமையை அதிகரிக்க உதவும் அனைத்திற்கும் புரதச்சத்தின் பங்கு முக்கிய தேவையாக விளங்குகிறது.

நம்மில் சைவம், அசைவம் என ஏதேனும் ஒரு வகை உணவை அதிகம் விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் இருப்போம். சிலர் எதுவாக இருந்தாலும் வெளுத்து வாங்குவார்கள். இதில் சைவம் மற்றும் அசைவம் எந்த உணவுகளில் அதிகமான புரதச்சத்துக் கிடைக்கிறது, அது எந்தளவு உடல் நலனை அதிகரிக்க உதவுகிறது என்று இனிப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைவம் உண்ணுபவர்களுக்கு

சைவம் உண்ணுபவர்களுக்கு

சைவம் சாப்பிடும் நபர்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் இருக்கின்றன. பாதாமில் தொடங்கி, காய்கறிகள், கீரை, பருப்பு உணவுகள் என தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள நிறைய உணவுகள் இருக்கின்றன. உயர்ரக புரச்தச்சத்து என்பது ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தையும் அபரிமிதமான வகையில் வளமாக்க உதவுகிறது.

பால் உணவுகள்

பால் உணவுகள்

பால் உணவுகளான, சீஸ், தயிர், பால் போன்றவற்றை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் புரதச்சத்து மட்டுமின்றி உடல்வலுவை அதிகரிக்கும் கால்சியம் சத்தும் கிடைக்கிறது.

பருப்பு உணவுகள்

பருப்பு உணவுகள்

சிறந்த அளவில் புரதச்சத்து பெற நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவு, பருப்பு. பருப்பு உணவுகளை நீங்கள் தினமும் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமைக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது.

நார்சத்து நிறைந்த காலை உணவு

நார்சத்து நிறைந்த காலை உணவு

நார்ச்சத்து நிறைந்த காலை உணவு உங்கள் செரிமானத்தை சீராக செயல்பட உதவுகிறது. இதனுடன், சோயா பீன்ஸ், ஓட்ஸ் மீல்ஸ் போன்ற சத்து வாய்ந்த உணவுகள் சேர்த்துக் கொள்வது உங்கள் உடல்நலன் மேலோங்க உதவுகிறது.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு

மீன், சிக்கன் என அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் நிறைய புரதச்சத்து நிறைந்த உணவுகள் இருக்கின்றன. இதை சரியான அளவில் உட்கொண்டு வருவது உடல்நலனை அதிகரிக்க உதவும்.

முட்டை

முட்டை

அசைவ உணவில் முட்டை தான் அதிகப்படியான புரதச்சத்து கொண்டுள்ள உணவாக இருக்கிறது. அதற்காக நிறைய முட்டை எல்லாம் சாப்பிடவது வீண். ஒருநாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடவது போதுமானது. அதற்கு மேல் சாப்பிடுவது உடலில் ஒட்டாது.

மீன்

மீன்

சிக்கனை விட மீனில் இருக்கும் புரதம் தான் உடலுக்கு நல்லது. மீன் மட்டுமில்லாது கடல்வாழ் உயிரினங்களான நண்டு, சூரை போன்றவை கூட நல்ல புரதச்சத்து கொண்டுள்ள உணவுகள் தான்.

சாலட் உணவுகள்

சாலட் உணவுகள்

நீங்கள் சைவம் அல்லது அசைவம் என எந்த உணவு சாப்பிடுபவராக இருந்தாலும் கூட சாலட் உணவுகள் சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது. தினமும் சாலட் உணவை டயட்டில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலுக்கு உயர்ரக புரதச்சத்து கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Ways To Add Protein To Indian Food

Do you know about the simple ways to add protein to indian foods? read here in tamil.
Subscribe Newsletter