Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நமது மண்ணில் விளையும் உணவுகளின் அதிசயிக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
தொழிநுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து உடல்நலக் குறைபாடுகளும் ஏகபோகமாக வளர்கிறது. இதற்கான மருந்துகள், சிகிச்சைகள் மட்டுமின்றி ஆரோக்கிய உணவென்ற போதும் இப்போது நாம் வெளிநாட்டை தான் எட்டி பார்த்து ஓடுகிறோம். நமது மண்ணில் விளையும் உணவுகள் தான் நமது உடலுக்கு ஒத்துப்போகும் என்பது சில படித்த அறிவாளிகளுக்கு தெரிவதில்லை.
தலை முதல் கால் வரை என பிரச்சனையாக இருந்தாலும் நமது மண்ணில் விளையும் உணவுகள் தான் சரியான தீர்வளிக்கும். அயல்நாட்டில் விளைந்து, பதப்படுத்தப்பட்ட, இரசாயன கலப்பு உள்ள உணவுகள் உடலில் நச்சுக்களை தான் அதிகரிக்கும். எனவே, எது ஆரோக்கியம், எது ஆரோக்கியம் இல்லை என அறிந்து உணவருந்த வேண்டும்......

நெல்லிக்காய்
உடல் வலிமை அதிகரித்து, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள் நெல்லிக்காய்.

பசலைக்கீரை
தாய்பால் குறைவாக சுரக்கும் பெண்கள் அவர்கள் குழந்தைக்கு (அல்லது) தாய்பால் கிடைக்காத குழந்தைக்கு கொடிபசலைக் கீரை சிறந்த உணவாகும்.

செம்பருத்தி
இதய வலிமையை அதிகரிக்க செம்பருத்தி பூ ஓர் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

மூட்டு வலி
முடக்கத்தான் கீரை மற்றும் முட்டைகோஸ் போன்ற உணவுகள் மூட்டு வலியை குணமாக்க உதவுகின்றன.

கற்பூரவள்ளி
இருமல், மூக்கடைப்பு, சளி, நெஞ்சு சளி போன்ற குளிர்கால உடல்நலப் பிரச்சனைகளுக்கு கற்பூரவள்ளி (ஓமவல்லி) சிறந்த தீர்வளிக்கும் ஒன்றாகும்.

மணத்தக்காளி
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக மணத்தக்காளிகீரை சிறந்த உணவாக திகழ்கிறது.

அருகம்புல்
இரத்தத்தை சுத்தம் செய்ய, நல்ல இரத்த ஓட்டம் போன்றவைக்கு அருகம்புல் ஓர் சிறந்த மூலிகை உணவு.

பப்பாளி
மூளையின் வலிமைக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தினமும் ஓர் பப்பாளி பழம் சாப்பிடுங்கள். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக் கூடாது, இது கருச்சிதைவு ஏற்படுத்த கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாயுத்தொல்லை
வாயு தொல்லையிலிருந்து விடுபட சிறந்த உணவாக விளங்குகிறது வெந்தயக் கீரை.

நீரிழிவு
வில்வம், முள்ளங்கி, அரைக்கீரை போன்ற உணவுகள் நீரிழிவு நோய் குறைய உதவும். நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செரிமானம்
அஜீரணத்தை போக்கும் திறன் புதினாவிற்கு உண்டு. மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்த அன்னாசி பழம் உதவுகிறது.

மாதவிலக்கு
மாதவிலக்கு கோளாறு இருக்கும் பெண்கள் ஆவாரம் பூ எடுத்துக் கொண்டால் பிரச்சனைகள் விரைவாக குணமாகும் என்று கூறப்படுகிறது.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலையை விரட்டும் திறன் கீழாநெல்லிக்கு உண்டு.

வாழைத்தண்டு
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வாழைத்தண்டு ஜூஸ், பொரியல் போன்றவை உட்கொண்டு வந்தால் விரைவாக அந்த கற்களை கரைத்துவிடலாம்.



Click it and Unblock the Notifications
