பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு, புற்றுநோயை ஏற்படுத்துமா? - அதிர்ச்சி!!!

Posted By:
Subscribe to Boldsky

இரசாயனங்கள் கலப்பு இல்லாத உணவே இல்லை என்ற நிலையில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருகிறோம். இந்த வகையில் இம்மாதத்தில் மேகி சிக்கி சின்னாபின்னமாகிப் போனது. அதன் பிறகு பேக்கேஜ் செய்து விற்கப்படும் பெரும்பாலான பொருட்களை சோதனை செய்ய அரசும் உத்தரவிட்டது.

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் - அதிர்ச்சி!!!

ஒருவேளை இவ்வாறான தயாரிப்பு உணவுகளில் மட்டும் தான் இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்று நினைத்தால். இயற்கை உணவுகள் என்று நாம் நம்பி வாங்கும் காய்கறி, பழங்களில் கூட இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் நிறத்திற்காகவும், கவர்ச்சிக்காகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் இரசாயனங்கள் பயன்படுத்துகின்றனர்.

நீங்க குடிக்கிற கூல்டிரிங்ஸ்'ல பூச்சிக்கொல்லி எவ்வளோ % கலக்கப்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா???

இவையெல்லாம், சீக்கிரம் பழுக்காமல் இருப்பதற்காக, ஆனால், மாம்பழங்கள் சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக, அவை காயாக இருக்கும் போதே, அதை விரைவில் பழுக்க வைக்க சில இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது, இவற்றால் தான் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிறைய இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்சியம் கார்பைடு (CaC2)

கால்சியம் கார்பைடு (CaC2)

பெரும்பாலும் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்க இந்த கால்சியம் கார்பைடு தான் சந்தையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கு அபாயமானது

மனிதர்களுக்கு அபாயமானது

ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் (arsenic and phosphorus), ஆகிய இந்த இரண்டும் மனிதர்களின் உடல்நலத்திற்கு அபாயகரமானது. Cac2 புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மை உடையது. மற்றும் இது மனித உடலில் இருக்கும் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றக்கூடிய கொடியதும் ஆகும்.

தடைசெய்யப்பட்ட இரசாயனம்

தடைசெய்யப்பட்ட இரசாயனம்

இந்திய உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்த இரசாயனம், மிக சாதாரணமாக சந்தைகளில் விற்கப்படுகிறது. வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் பெரும்பாலும் இந்த இரசாயனத்தை பயன்படுத்துகின்றனர்.

கால தாமதம்

கால தாமதம்

இயற்கையாக ஓர் பழம் பழுக்க வேண்டும் எனில் அதற்கு ஏற்ற காலத்தை அது எடுத்துக்கொள்ளும். ஆனால், நிறைய சம்பாதிக்க வேண்டும். உடனே பணம் பார்க்க வேண்டும் மற்றும் வருடம் முழுக்க அந்த பழங்களை சந்தையில் விற்க வேண்டும் என்பதற்காக, CaC2 போன்ற இரசாயனங்கள் சந்தையில் விற்கப்படுகிறது.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

கால்சியம் கார்பைடு புற்றுநோய் மட்டுமல்லாது, சரும அழற்சிகள், தடித்தல், மற்றும் சரும புற்றுநோய் போன்ற அபயாமான சரும நல பாதிப்புகளை உண்டாக்குகிறது.

பழங்களை நன்கு கழுவ வேண்டும்

பழங்களை நன்கு கழுவ வேண்டும்

ஆகவே, இதில் இருந்து உடல்நல அபாயம் ஏற்படாமல் தப்பிக்க, சந்தையில் வாங்கும் பழங்களை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்துங்கள் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

எனவே, மால்களிலும் மட்டுமின்றி, பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தையில் வாங்கும் போதும் கூட, மிகுந்த எச்சரிக்கையுடன் வாங்குங்கள். மற்றும் நன்கு சுத்தமாக கழுவிய பிறகு பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chemical Used To Ripen Mangoes Can Cause Cancer

Do you know about chemical used to ripen mangoes can cause cancer? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter