செக்ஸ் வாழ்க்கையை அழிக்கும் ஆச்சரியமான சில உணவுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உங்கள் படுக்கையில் உங்களால் திறம்பட செயல்பட முடியவில்லையா? அப்படியானால் நீங்களும் உங்கள் துணையும் உங்களது வாழ்க்கையில் மிகவும் மோசமான செக்ஸ் அனுபவத்தை தான் பெறுவீர்கள். பாலுணர்வை ஊட்டுகிற பல பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. அவைகள் உங்கள் ஆண்மையை ஊக்குவித்து, படுக்கையில் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். ஆனால் அனப்ரோடிசியாக் பற்றி நீங்கள் அறிவீர்களா?

இவைகள் எல்லாம் உங்கள் படுக்கை அனுபவம் மற்றும் சுகத்தை குலைக்கும் உணவுகளாகும். உங்கள் துணையோடு நீங்கள் படுக்கையில் ஒழுங்காக செயலாற்ற முடியாமல் போனால் செக்ஸ் விஷயத்தில் நீங்கள் தோற்று போனவராகவே பார்க்கப்படுவீர்கள். இதனால் உங்கள் துணைக்கு உங்கள் மீது ஒரு விரக்தி உண்டாகி விடும். இதனால் அவர் உங்களுக்கு துரோகம் கூட இழைக்கலாம்.

உங்களுக்கு உடலுறவு கொள்ளும் மனநிலை இல்லை என்றாலும் கூட உங்கள் துணைக்கு உங்களை படுக்கையில் உரிக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படுவது பல நேரங்களில் நாம் கடந்து வருவது தான். சில நேரங்களில் உங்கள் இருவருக்குமே உடலுறவின் மீது நாட்டம் இல்லாமல் போகலாம். அதனால் ஆண்மையைக் குறைக்கும் உணவுகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அது உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு எந்தளவிற்கு இடையூறாக இருக்கிறது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த கீழ்கூறிய உணவுகளை நீங்களும், உங்கள் துணையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதுபானம்

மதுபானம்

தங்களுக்கு இருக்கும் தடைகளை தகர்த்து, தங்கள் துணையை சிறப்பான முறையில் அணுக மதுபானம் உதவுவதால், செக்ஸ் வாழ்க்கைக்கு அது தேவை என பலரும் நம்புகின்றனர். கொஞ்சமாக மதுபானம் பருகினால், தங்கள் செக்ஸ் உணர்வு ஊக்குவிக்கப்படும் என்றும் படுக்கையில் தாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் கூட சிலர் நம்புகின்றனர். ஆனால் பல நேரங்களில் யாரும் ஒரு பெக்குடன் நிறுத்துவதில்லை; மாறாக 3-4 பெக் வரை மதுபானத்தை பருகுவார்கள். இதன் காரணமாக உணர்ச்சிபூர்வமான உடலுறவில் அவர்களால் ஈடுபட முடிவதில்லை. அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தால், மன அழுத்தம் உண்டாகும். சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியின் அளவையும் இது குறைத்து விடும். படுக்கையில் குதூகலம் வேண்டும் என நீங்கள் நினைத்தால் ஒரு பெக்குடன் கண்டிப்பாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

காபி

காபி

நீங்கள் காபி பிரியரா? அப்படியானால் படுக்கையில் நீங்கள் திறம்பட செயலாற்ற காபி குடிக்கும் அளவை கண்டிப்பாக நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 5-6 கப் காபி குடித்தால் உங்களின் அட்ரீனல் சுரப்பிகள் பாதிப்படையும். அளவுக்கு அதிகமாக காபி பருகினால் அட்ரீனல் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைந்துவிடும். இதனால் அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் உற்பத்தியாகும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் உங்கள் படுக்கையில் தோல்வியை தான் சந்திப்பீர்கள். இதனால் பாலியல் சமமின்மை உண்டாகும். உங்கள் துணையை படுக்கையில் ஈர்க்க வேண்டும் என்றால், தினமும் 1-2 கப் காபி மட்டும் குடியுங்கள்.

புதினா

புதினா

உடலுறவுக்கு தயாராகும் பலர், தங்கள் வாயில் நல்ல நறுமணத்தை வரவழைக்க, பெப்பர்மின்ட் சூயிங் கம் அல்லது மின்ட் இலைகளை உண்ணுவார்கள். ஆனால் செக்ஸ் வாழ்க்கையின் மீது மோசமான தாக்கத்தை புதினா ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், புதினாவில் உள்ள மெந்தால் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கும். இதனால் படுக்கையில் உங்களால் நன்றாக செயல்பட முடியாமல் போகும். வாயில் நல்ல நறுமணத்தை பெற வேண்டுமானால், இஞ்சி துண்டை கொஞ்சம் வாயில் போட்டு மெல்லுங்கள்.

சோடா மற்றும் கோலா

சோடா மற்றும் கோலா

பாலியல் ரீதியான செயல் பிறழ்ச்சி ஏற்படுத்தும் மோசமான உணவுகளில் ஒன்று தான் சோடா. இவ்வகை பானங்களை கண்டிப்பாக உடலுறவுக்கு முன் தவிர்க்க வேண்டும். உங்கள் துணையை எப்போதுமே படுக்கையில் ஈர்க்க வேண்டுமானால், இவ்வகை பானங்களை மிகவும் குறைந்த அளவிலேயே பருக வேண்டும். இது போக உடல் வறட்சி, உடல் பருமன் மற்றும் பற்களில் துளைகள் போன்றவற்றையும் உண்டாக்கும். அதனால் சோடா கலந்த பானங்களை கண்டிப்பாக தவிர்க்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

 கார்ன் ஃப்ளேக்ஸ்

கார்ன் ஃப்ளேக்ஸ்

கெல்லாக்ஸ் தானியத்தை உருவாக்கிய ஜான் ஹார்வே கெல்லாக், அதனை உட்கொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் காம உணர்வை குறைக்குமாறு செய்துள்ளார் என உங்களுக்கு தெரியுமா? இந்த தானியத்தில் உள்ள சர்க்கரை அதிகரித்து, உங்கள் இரத்த அளவிலும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் பாதிக்கப்படுகிறது. இதனால் படுக்கையில் உங்கள் செயல்பாடு மோசமாகவே இருக்கும். இரவில் உங்கள் துணையுடன் அருமையான உடலுறவில் ஈடுபட வேண்டும் என ஆவல் இருந்தால், இந்த உணவையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Foods That Kill Your Bed Life

The following are some of the foods that you and your partner should avoid to improve your sex life.
Story first published: Sunday, October 19, 2014, 9:03 [IST]
Subscribe Newsletter