Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: தலைவராக இருப்பதற்கு யார் வேண்டுமென்றாலும் ஆசைப்படலாம், ஆனால் நல்ல தலைவராக மாறுவதற்கு சில குணங்களும், தகுதிகளும் இருக்க வேண்டும், சிலர் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அந்த தகுதிகளை அடையுய முடிவதில்லை, ஆனால் சிலரிடம் அந்த தகுதிகள் இயற்கையாகவே உள்ளன. சிலர் தங்களின் தலைமைத்துவத்தால் அனைவரையும் ஈர்க்கிறார்கள், அவர்கள் முடிவெடுப்பதில் சிறந்தவர்களா இருப்பார்கள் மற்றும் தெளிவான நோக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஒருவரின் தலைமைத்துவத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த தேதி முக்கியப்பங்கு வகிக்கும் என்று எண் கணிதம் கூறுகிறது. இந்த சக்தி வாய்ந்த தலைமைத்துவ ஆற்றல் தற்செயலானது அல்ல, அது அவர்களின் பிறந்த தேதியிலிருந்து பாய்கிறது. ஒவ்வொரு எண்ணுக்கும் அதற்கென சொந்த அதிர்வு உண்டு, மேலும் அவற்றில் சில இயல்பாகவே செல்வாக்கு, அதிகாரம் மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்கின்றன.
எண் கணிதமும், தலைமைத்துவமும்
எண் கணிதத்தில், தலைமைத்துவம் என்பது ஒருவரின் முழுமையான பிறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படும் வாழ்க்கைப் பாதை எண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு இயற்கையான தலைவர் அதிகாரத்தைத் தேடிச் செல்வதில்லை, அதுவே அவர்களைத் தேடிவரும். அவர்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் சரியான முடிவெடுப்பவர்கள், தங்கள் திறமைகளின் மீது தன்னம்பிக்கை கொண்டவர்கள், மேலும் மற்றவர்களை வழிநடத்த விரும்புகிறார்கள். சில எண்களில் பிறந்தவர்கள் மற்ற எண்களை விட இந்தக் குணங்களை வலுவாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எண் 1
அனைத்து மாதத்திலும் 1, 10, 19, அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கைப்பாதை எண் 1 ஆகும். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் புதிய விஷயங்களில் துணிச்சலாக முடிவெடுப்பார்கள். சுதந்திரம் என்பது அவர்களின் பிரதான குணமாகும். வலுவான மன உறுதி, தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவர்களின் மற்ற பிரதான குணங்களாகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதிய யோசனைகளைத் தொடங்குவதை விரும்புகிறார்கள் மற்றும் தங்களுக்கான சொந்தப் பாதையை உருவாக்குகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை, தலைமை தாங்குவதற்கு அவர்களை இயல்பான முதல் தேர்வாக ஆக்குகிறது.
எண் 3
அனைத்து மாதத்திலும் 3, 12, 21 அல்லது 30 போன்ற பிறந்த தேதிகளின் பிறந்தவர்களின் வாழ்க்கைப் பாதை எண் 3 ஆகும். அவர்கள் தங்களின் படைப்பாற்றலால் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்து, பேசி, கற்பித்து, அவர்களை மேம்படுத்துவதன் மூலம் வழிநடத்துகிறார்கள். அவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும் , மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கப்பவர்களாகவும் மற்றும் மகிழ்ச்சியானவர்களாகவும், மேலும் வேடிக்கையையும் பொறுப்பையும் சமநிலைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். தங்களின் நேர்மறையான ஆளுமை மற்றும் வெளிப்படையான குணம் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் சிறந்த வழிகாட்டிகளாகவும், வார்த்தைகளால் மற்றவர்களிடம் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் மாறுகிறார்கள்.
எண் 8
அனைத்து மாதத்திலும் 8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், வாழ்க்கைப்பாதை எண் 8 கொண்டவர்களாக விளங்குகிறார்கள். திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால உத்திகளை வகுத்தல் ஆகியவற்றிலேயே அவர்களின் பலம் அடங்கியுள்ளது. தீவிர ஒழுக்கம், நடைமுறை சார்ந்த கண்ணோட்டம், தொலைநோக்குச் சிந்தனை மற்றும் வலுவான நிர்வாகத் திறன்கள் ஆகியவை இவர்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும். இவர்கள் மன உறுதியிடனும், கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையுடனும் விளங்குவதுடன், நெருக்கடியான சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் தலைமைத்துவம் யதார்த்தமானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

