Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்
Egg Butter Masala Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் பண்ணுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச ஒண்ணு. பெரும்பாலும் முட்டை குழம்புன்னா முட்டையை குழம்பு உடைத்து விட்டு வேக வைப்போம். இல்லனா வேக வைத்த முட்டையை சேர்த்து கிரேவி செய்வோம். ஆனால் எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரி முட்டைக்குழம்பு செய்றது. முட்டையுடன் பட்டரை சேர்த்து ஒரு தடவை குழம்பு செஞ்சு பாருங்க. இந்த குருமாவோட டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.

பட்டர், முந்திரி மற்றும் இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த முட்டை பட்டர் மசாலா, சப்பாத்தி, பூரி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். இந்த முட்டை குருமா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சமைக்கத் தெரியாத பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை விரைவில் செய்து விடலாம். இந்த முட்டை மசாலா ரெஸ்டாரண்ட்களில் பரிமாறப்படும் பனீர் பட்டர் மசாலா போலவே இருக்கும்.
உங்களுக்கு முட்டை பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பட்டர் மசாலாரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- 4 வேக வைத்த முட்டை
- 2 ஸ்பூன் பட்டர்
- 1 கப் வெங்காயம்
- 1 கப் தக்காளி
- 4 பூண்டு பல்
- அரை இன்ச் இஞ்சி
- 10 முந்திரிப்பருப்பு
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள்
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- அரை ஸ்பூன் கரம் மசாலா
- அரை ஸ்பூன் மல்லித் தூள்
- கால் ஸ்பூன் கசூரி மேத்தி
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் முட்டைகளை நீரில் வேகவைத்து உரித்து வைத்துக் கொள்ளவும்.
- வேகவைத்த முட்டைகளை ஒரு முட்கரண்டியால் குத்தி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 1 ஸ்பூன் பட்டை போட்டு சூடாக்கவும், பின்னர் உரித்த முட்டையை போட்டு வெண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். முட்டை நிறம் மாறியதும் அவற்றை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தனியாக எடுத்து வைக்கவும்.
- ;பின் அதே கடாயில், மிதமான தீயில் நறுக்கிய வெங்காயம், முந்திரி, இஞ்சி, பூண்டு, தக்காளி மற்றும் உப்பை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்தவுடன், மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். தக்காளி கரையும் அளவிற்கு குழைந்து போகும் வரை வதக்கவும். இதை முழுமையாக ஆறவைத்து, அரை கப் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் 1 ஸ்பூன் வெண்ணெயை சூடாக்கி, அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்க்கவும்.
- அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து, கிரேவி சரியான பக்குவத்திற்கு வரத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு கரம் மசாலா மற்றும் தனியா தூள் சேர்த்து, கிரேவியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் வேகவைத்து வறுத்த முட்டையை சேர்த்து கிளறவும். இறுதியாக கசூரி மேத்தியை சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான முட்டை பட்டர் மசாலா ரெடி. இதை சூடான சப்பாத்தி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications