Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
செக்ஸ் வாழ்க்கையை ஸ்பைஸியாக்க இத சாப்பிடுங்க பாஸ்...!
சிலருக்கு பாலுணர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் அவர்களால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாது. இப்படி உறவில் ஈடுபட முடியாவிட்டால், குழந்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமின்றி, தற்போது ஃபேஷன் என்று பெண்களும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களைப் பின்பற்றுகின்றனர். இதனால் அவர்களின் பாலுணர்ச்சியானது குறைந்துவிடும்.
ஆகவே திருமணத்திற்கு பின் ஆண்களும் சரி, பெண்களும் சரி, கெட்ட பழக்கங்களை தவிர்த்தால் தான், இன்றைய காலத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நிச்சயம் குழந்தைப் பிறப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, குழந்தை வேண்டுமென்று நினைக்கும் தம்பதிகள், ஒருசில உணவுகளை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், காதல் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பதுடன், எளிதில் கருத்தரிக்கவும் முடியும்.
சரி, இப்போது காதல் வாழ்க்கை சந்தோஷமாக அனுபவிக்க உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போம்...

பூசணி விதைகள்
உங்களுக்கு பரங்கிக்காய் பிடிக்காதா? பிடிக்காவிட்டாலும் அதனுள் உள்ள விதைகளையாவது சாலட்டில் சேர்த்து சாப்பிடப் பழகுங்கள். ஏனெனில் பூசணிக்காய் விதைகளில் ஜிங்க் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளது. இலை பாலுணர்ச்சியைத் தூண்டுவதுடன், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணு உற்பத்திக்கும் மிகவும் நல்லது.

கடல் சிப்பி
கடல் சிப்பியானது இயற்கை நமக்கும் அளித்த ஒருவித வயாகரா. இந்த கடல் சிப்பியில் ஜிங்க், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், இது செக்ஸ் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க உதவும். ஆகவே தவறாமல் இதனை வாரம் ஒருமுறையாவது உட்கொண்டு வாருங்கள்.

வாழைப்பழம்
விலைக் குறைவில் கிடைக்கும் வாழைப்பழம் கூட செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக அனுபவிக்க உதவும். குறிப்பாக வாழைப்பழமானது செரடோனின் என்னும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த ஹார்மோன் தான் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த திருப்தியைத் தரும். மேலும் இது உறவில் ஈடுபடுவதற்கான எனர்ஜியையும் கொடுக்கும்.

செலரி
செலரி கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலும், அவை பாலுணர்ச்சியைத் தூண்டி, மகிழ்ச்சியை அனுபவிக்க உதவும்.

டார்க் சாக்லெட்
ஒரு துண்டு டார்க் சாக்லெட் சாப்பிட்டாலும், அது பாலுணர்ச்சியைத் தூண்டி உறவில் உச்சக்கட்ட சந்தோஷத்தை அனுபவிக்கும் வரை போதிய எனர்ஜியைக் கொடுக்கும்.

மிளகாய்
உணவில் மிளகாயை சேர்த்து வந்தால், அவை உடலின் வெப்பத்தை தூண்டிவிட்டு, பாலுணர்ச்சியையும் அதிகரித்து, இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications